full screen background image

பூனம் பாண்டே நடிக்கும் தமிழ்ப் படம்

பூனம் பாண்டே நடிக்கும் தமிழ்ப் படம்

கிங்ஸ் எண்டர்பிரைசஸ் மற்றும் டி.ஜி. போஸ்ட் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘மைதிலி & கோ’. இந்த படத்தின் நாயகியாக சர்ச்சை நடிகை பூனம் பாண்டே நடிக்கிறார்.

இவர் 2011-ல்  நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, “இந்தியா வெற்றி பெற்றால் நான் நிர்வாணமாக போஸ் கொடுக்கிறேன்” என்று அறிக்கை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர்.

இவருடன் இந்தப் படத்தில் பாண்டியராஜன், சுமன், ‘துப்பாக்கி’ படத்தில் ஒரு வில்லனாக நடித்த ஜாகீர் உசேன் ஆகியோரும் நடிக்கிறார்கள். படத்திற்கு இசையமைத்து இயக்குகிறார் வீரு.கே.

படம் பற்றி இயக்குநர் கூறுகையில், “இந்த படம் ஒரு வித்தியாசமான கதை களம் கொண்ட படம். சினிமா துறையில் ஒரு பெண் நினைத்தால் எது வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு இந்த படம் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும். ஆங்கிலப் படத்திற்கு இணையாக இந்த படம் தயாரிக்கப்பட்டு உள்ளது. நாயகியை மையப்படுத்தி முழுக்க முழுக்க கதை உருவாகப்பட்டுள்ளது.

நாயகி இருக்கும் ஊரில் தீவிரவாத கும்பல் ஒன்று வெடிகுண்டு வைக்க சதி திட்டம் தீட்டுகிறது. இதை அறிந்த நாயகி அக்கும்பலுடன் மோதி இறுதியில் அவர்களது திட்டத்தை எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் கதை.

அதிரடியாக ஐந்து சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளன. படப்பிடிப்பு  முழுவதும் அமெரிக்கா, ஜெர்மனி, மும்பை, ஹைதராபாத், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.  மிக விரைவில் இந்த படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது” என்றார்.

ஒளிப்பதிவு – சி.ராம்

எடிட்டிங் – ரகு

கலை – பாப்ஜி

ஸ்டண்ட் – மாஸ் மாதா

பாடல்கள் – சினேகன், இந்து

வசனம் – வேலுமணி

நடனம் – பிரேம் ரஷித்

மக்கள் தொடர்பு – மவுனம் ரவி

Our Score