full screen background image

‘டாவு’ படத்தில் நடிக்க வருகிறார் ரெபேக்கா மோனிகா ஜான்..!

‘டாவு’ படத்தில் நடிக்க வருகிறார் ரெபேக்கா மோனிகா ஜான்..!

Two Movie Buffs நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் திரைப்படம் ‘டாவு’.

இந்தப் படத்தில் ‘கயல்’ சந்திரன் ஹீரோவாக நடிக்கிறார். மற்றும் முனீஸ்காந்த், லிவிங்ஸ்டன், ஊர்வசி, மனோபாலா, கல்யாணி நடராஜன், பாவா லக்ஷ்மணன் ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.

சந்தோஷ் தயாநிதி இசை அமைக்க, தீபக் குமார் பதி ஒளிப்பதிவில், கே.எல்.பிரவீன் படத் தொகுப்பு செய்ய, ரெமியன் கலை வண்ணத்தில், அஜய்  சதீஷ் நடனம் அமைக்க, சுபீகா ஆடை  வடிவமைக்க, பிரபுவின் சண்டை பயிற்சியை மேற்கொள்கிறார். தில்லுக்கு துட்டு வெற்றிப் படத்தை இயக்கிய இயக்குநர் ராம்பாலாதான் இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.

Rebecca Monica John-1

படத்தின் ஹீரோயினை வலை வீசி தேடியவர்கள் இப்போதுதான் கண்டுபிடித்திருக்கிறார்கள். மலையாளத்தில் Jacobinte Swargarajyam என்கிற படத்தில் நிவின் பாலியுடன் நடித்திருக்கும் நடிகை ரெபேக்கா மோனிகா ஜான் இந்தப் படத்தில் ‘கயல்’ சந்திரனுக்கு ஜோடியாகிறார்.

இவரை தேர்வு செய்தது பற்றிப் பேசிய இயக்குநர் ராம்பாலா, “இந்தக் கதைக்கு மிக அழகான கதாநாயகி  தேவை. ரெபேக்கா மோனிகா ஜான் மிக, மிக பொருத்தமாக இருப்பார்.தமிழ் ரசிகர்களுக்கு இவரை நிச்சயம் பிடிக்கும்” என்கிறார்.

 

Our Score