கடந்த ஜூலை 11-ம் தேதியன்று ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வீடியோவாக வெளியானது. தொடர்ந்து வலிமை படத்தின் பல போஸ்டர்களும் வெளியாகின.
ஒரேயொரு அப்டேட்டுக்காக காத்திருந்த அஜீத்தின் ரசிகர்களை தொடர்ந்து போஸ்டர்களை வெளியிட்டு இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டார் தயாரிப்பாளர் போனி கபூர்.
இதோடும் விடவில்லை. மறுநாளே அஜீத் பைக்கில் அமர்ந்திருப்பது போன்ற 2 ஸ்டில்ஸ்களை வெளியிட அஜீத் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்துக்கே போனார்கள்.
உண்மையில் மற்றைய போஸ்டர்களில் இருந்த அஜீத்தைவிடவும் இந்த பைக்கில் அமர்ந்திருந்த அஜீத் ஸ்மார்ட்டாகவும், அழகாகவும் இருந்ததால் இதையே முதலில் ரிலீஸ் செய்திருக்கலாமே என்ற கருத்துக்களும் அஜீத் ரசிகர்களிடையே பேசப்பட்டு வந்தது.
இதே கருத்தை தனது டிவீட்டரில் வெளியிட்ட நடிகர் சாந்தனுவுக்கு வேறு விதமான வரவேற்பு கிடைத்தது என்பது எதிர்பாராதது.
இந்தப் புகைப்படத்தைப் பார்த்த நடிகர் சாந்தனு தனது டிவீட்டர் பக்கத்தில், “தல இந்தப் புகைப்படத்தில் சூப்பர் ஸ்மார்ட்டாக இருக்கிறார்..” என்று பதிவிட்டார்.
உண்மையில் சாந்தனு அஜீத் பற்றிய தனது உண்மைக் கருத்தை இப்படி சொல்லியிருந்தாலும் அவர் தீவிரமான விஜய்யின் ரசிகர் என்பதால் விஜய் ரசிகர்கள் அவரைக் கண்டிக்கத் துவங்கினார்கள். கூடவே அஜீத்தின் ரசிகர்களும் சேர்ந்து கொண்டு அவரை “டபுள் கேம் ஆடுறியா தம்பி..?” என்றெல்லாம் கேட்கத் துவங்க நொந்து போனார் நடிகர் சாந்தனு.
இதையடுத்து இதற்கு டிவீட்டரிலேயே பதில் சொன்ன சாந்தனு, “இப்போது டிவீட்டரில் எது பேசினாலும் தவறாகிறது. நல்லவிதமாகச் சொன்னாலும் தவறாகவே அர்த்தம் செய்து கொள்கின்றனர். நான் சொன்னதைத் திரித்துப் பேசுகிறார்கள். எனவே, எனது முந்தைய ட்வீட்டில் சொன்னதை மீண்டும் வார்த்தைகள் மாற்றிச் சொன்னேன். ஒரு நல்ல விஷயம் சொன்னாலும் அதை யோசித்து யோசித்துத்தான் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். சமூக ஊடகம் மிகவும் ஆபத்தானதாகிவிட்டது. எப்படியோ, எனக்குத் தலயின் அந்தத் தோற்றம் பிடித்திருந்தது. அதனால் ட்வீட் செய்தேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அழகா இருக்காருன்னு சொன்னால்கூட குத்தமாய்யா..?