நடிகை நக்மாவை முத்தமிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ..!

நடிகை நக்மாவை முத்தமிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ..!

பொது வாழ்க்கையில் ஈடுபட அரசியலுக்கு வந்தால் அங்கேயும் பெண்களுக்கு அவமரியாதைதான் ஏற்படுகிறது..!

பாவம் நடிகை நக்மா. எப்பாடுபட்டாவது அரசியலில் தலையெடுத்துவிட வேண்டுமாய் கங்கணம் கட்டிக் கொண்டு பல கட்சிகளிலும் முயன்று பார்த்து கடைசியாய் ராகுலின் கடைக்கண் பார்வைபட்டு இப்போதுதான் உத்தரப்பிரதேசத்தி்ன மீரட் தொகுதியின் வேட்பாளராக ஆகியிருக்கிறார்.

தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றபோது உடன் வந்து கொண்டிருந்த மீரட் தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கஜ் ராஜ் சர்மா திடீரென்று நக்மாவை இறுக்கியணைத்து ‘உம்மா’ கொடுத்துவிட சட்டென்று அவரது கையைத் தட்டிவிட்டு ஜீப்பில் ஏறிவிட்டார் நக்மா.

nagma-2

திடீரென்று ஏற்பட்ட அசம்பாவிதத்தால் அவருடைய அதி்ரச்சி அவரது முகத்தி்ல பிரதிபலித்தது. இதன் விளைவாய் பேரணி முடிந்து மேடையில் ஏறப் போகும்போது திடீரென்று மேடை பேச்சை ரத்து செய்துவிட்டு ஹோட்டலுக்கு போய்விட்டாராம் நக்மா.

நக்மாவை அவமரியாதை செய்ததற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ. மன்னிப்பு கோர வேண்டும் என்று மகிளா காங்கிரஸ் உறுப்பினர்கள் கொதிக்க.. சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.வோ கூலாக “இதுல என்ன இருக்கு..? என் அன்பை அவருக்குத் தெரிவித்தேன்…” என்கிறாராம்..

இது எப்படி இருக்கு..?

இதன் வீடியோ கீழே :

Our Score