full screen background image

‘கல்லூரி’யில் துவங்கி தற்போது ‘காலேஜ் ரோட்’டுக்கு வந்திருக்கும் நடிகர் லிங்கேஷ்..!

‘கல்லூரி’யில் துவங்கி தற்போது ‘காலேஜ் ரோட்’டுக்கு வந்திருக்கும் நடிகர் லிங்கேஷ்..!

அன்று தமன்னாவோடு ‘கல்லூரி’ படத்தில் கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்தும் திரையுலகில் தொடர்ந்து நடிக்க முடியாமல் காணாமல் போன நடிகர் லிங்கேஷ், இன்று காலேஜ் ரோடு’ படத்தின் மூலம் கதாநாயகனாக மீண்டும் வந்துள்ளார்.

நடிகர் லிங்கேஷ் பல படங்களில் வில்லனாக, குணச்சித்திர நடிகராக அறியப்பட்டவர். இவர் நடித்த ‘கபாலி’, ‘பரியேறும் பெருமாள்’ படங்கள் இவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தாலும், கதாநாயகனாக இப்போதுதான் காலேஜ் ரோடு’ படத்தில் அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தை M.P.Entertainment நிறுவனம் தயாரித்துள்ளது. ஆப்ரோ இசையமைத்திருக்கிறார். அறிமுக இயக்குநரான  ஜெய் அமர்சிங் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். 

மாணவர்களின் கல்விக் கடன் பிரச்சினைகளைப் பற்றிப் பேசியிருக்கும் இத்திரைப்படம் மாணவர்கள் மத்தியில் நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று படக் குழுவினர் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஏற்கனவே இந்தப் படத்தை பார்த்த இயக்குநர் ரஞ்சித் படத்தைப் பெரிதும் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ‘காலேஜ் ரோடு’ படம் வரும் டிசம்பர் 30-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பி.வி.ஆர். பிச்சர்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் வெளியிடுகிறது.

Our Score