தேவகன்யா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பிஜு கரிம்பின் கலையில் தயாரித்துள்ள படம் ‘1982 அன்பரசின் காதல்’.
இந்தப் படத்தில் ஆஷிக் மெர்லின், சந்தனா அரவிந்த், அமல் ரவீந்திரன், அருணிமா, ஹரீஷ் சிவப்பிரகாசம், செல்வா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஜிஸ்பின் செபாஸ்டியன் ஒளிப்பதிவையும், கிரேசன் படத் தொகுப்பையும், எஸ்.சிந்தாமணி இசையையும், சிபு கிருஷ்ணா கலையையும், டின்ஸ் ஜேம்ஸ் சண்டைப் பயிற்சியையும், நிதின் கே. உதயன் புகைப்படங்களையும், ராயீஸ் சுல்தான் நடன பயிற்சியையும், விஜய முரளி பத்திரிகை தொடர்பையும், அனுமோட் சிவராம், பென்னி இருவரும் பின்னணி இசையையும் செய்துள்ளனர்.
புதுமுக இயக்குநரான உல்லாஷ் சங்கர் இந்தப் படத்தை இயக்கியிருப்பதோடு படத்திலும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படம் பற்றி இயக்குநர் உல்லாஷ் சங்கர் பேசும்போது. “கதையின் நாயகனான அன்பரசு ஒரு பெண்ணை மூன்று வருடங்களாய் காதலிக்கிறான். அந்தப் பெண்ணிடம் பல முறை காதலை வெளிப்படுத்த முயலுகிறான். அவனால் வெளிப்படுத்த இயலவில்லை. இதை அறிந்த நண்பர்கள் அன்பரசை கிண்டலும், கேலியும் செய்கின்றனர்.
மனம் தளராத அன்பரசு காதலி இருக்கும் கேரளாவிற்கு சென்று அவளிடம் காதலை கூற முற்படுதையில் அந்த திடுக்கிடும் சம்பவம் நடைபெறுகிறது. அதிர்ச்சியின் உச்சத்திற்கு செல்லும் அன்பரசு அவளிடம் தன் காதலை சொன்னானா என்பதை கதைக் களமாக்கி, நறுக்கான வசனம் எழுதி பரபரப்பான திரைக்கதை அமைத்து எனது முதல் படமாக இதை டைரக்ட் செய்துள்ளேன்” என்றார் இயக்குநர் உல்லாஷ் சங்கர்.
தேனி, கம்பம், போடிநாயக்கனூர், மூணார் மற்றும் கேரளாவில் உள்ள அழகிய இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது.
விரைவில் இத்திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.









