பிரபு, மதுபாலா இணைந்து நடிக்கும் ‘காலேஜ் குமார்’ திரைப்படம்..!

பிரபு, மதுபாலா இணைந்து நடிக்கும் ‘காலேஜ் குமார்’ திரைப்படம்..!

MrPicture என்கிற புதிய பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எல்.பத்மநாபா தயாரிக்கும் புதிய தமிழ்த் திரைப்படம் ‘காலேஜ் குமார்’.

இந்தப் படத்தில் ‘இளைய திலகம்’ பிரபு, மதுபாலா இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் ராகுல் விஜய், பிரியா வட்லமணி இருவரும் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். மனோபாலாவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

1996-ம் ஆண்டு இயக்குநர் சீமான் இயக்கிய ‘பாஞ்சாலங்குறிச்சி’ படத்தில்தான் பிரபுவும், மதுபாலாவும் ஜோடியாக நடித்திருந்தனர். அந்தப் படத்திற்குப் பிறகு இப்போது மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

இந்தப் படத்திற்கு காசிப் இசையமைக்கிறார். அறிமுக இயக்குநரான ஹரி சந்தோஷ் எழுதி, இயக்குகிறார்.

இந்தப் படத்தின் துவக்க விழா இன்று காலை சென்னையில் ‘தி பார்க்’ ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ‘இளைய திலகம்’ பிரபு, நடிகை மதுபாலா, பிரியா வட்லமணி, நாயகன் ராகுல் விஜய், இயக்குநர் ஹரி சந்தோஷ், தயாரிப்பாளர் எல்.பத்மநாபா, நடிகர் சாம்ஸ், தயாரிப்பாளர் சுரேஷ் கொட்டாக்காரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகர் பிரபு பேசும்போது, “நான் கடந்த 37 வருடங்களாக சினிமாவில் நடித்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ‘காலேஜ் குமார்’ திரைப்படம் எனது 225-வது படம். வருடங்களுக்கு முன்பு நானும், மதுபாலாவும் ‘பாஞ்சாலங்குறிச்சி’ படத்தில் ஜோடியாக நடித்தோம். தற்போது இந்த ‘காலேஜ் குமார்’ படத்தில் மீண்டும் சேர்ந்து நடிக்கிறோம்.

சிறுவயதில் இருந்தே நான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். படங்களை விரும்பி பார்ப்பேன். அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்தது. ஆனால் அது கடைசிவரையிலும் நிறைவேறவில்லை. இதுபோல் பத்மினியம்மா, சாவித்திரியம்மா, ஆகியோருடனும் சேர்ந்து நடக்காததில் எனக்கு இப்போதும் வருத்தம் உண்டு. சினிமா வாழ்க்கையில் இவையெல்லாம் எனது நிறைவேறாத ஆசைகளாக உள்ளன.

‘விக்ரம் பிரபுவுடன் சேர்ந்து எப்போது நடிப்பீர்கள்?’ என்று பலரும் கேட்கிறார்கள். நல்ல கதை அமைந்தால் இருவரும் சேர்ந்து நடிப்போம்.” என்றார். 

college-kumar-movie-poojai-stills-8 college-kumar-movie-poojai-stills-7 college-kumar-movie-poojai-stills-6 college-kumar-movie-poojai-stills-5 college-kumar-movie-poojai-stills-4 college-kumar-movie-poojai-stills-3 college-kumar-movie-poojai-stills-2 college-kumar-movie-poojai-stills-1-1 college-kumar-movie-poojai-stills-1

Our Score