“தமிழகத்தில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் தியேட்டர்களில் 100 சதவிகித இருக்கைகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும்…” என்று தமிழக அரசிடம் தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இது குறித்து அந்தச் சங்கத்தினர் இன்று வெளியிட்டுள்ள தீர்மான அறிக்கையில் இது போன்று மேலும் பல கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன.
1. 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி.
2. 8 சதவிகித உள்ளாட்சி வரியை நீக்க வேண்டும்.
3. தியேட்டர்களின் உரிமம் புதுப்பித்தலை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை என்று மாற்ற வேண்டும்.
4. புதிய திரையரங்குகளை அமைப்பதற்கும், பழைய திரையரங்குகளை மாற்றியமைப்பதற்கும் பொதுப்பணித் துறையின் அனுமதி மட்டுமே போதும் என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
5. தற்போது டிஜிட்டல் முறையில் திரைப்படங்களை வெளியிடுவதால் பழைய ஆபரேட்டர் லைசென்ஸ் முறையை நீக்க வேண்டும்.
6. தியேட்டர்களில் வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.
ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகள் திரைப்படத் துறைக்கு அளித்துள்ள சலுகைகளைப் போல தமிழகத்திலும் வழங்க வேண்டும்.
7. 10 கோடி பட்ஜெட்டுக்கும் குறைவான படத்திற்கு ஜி.எஸ்.டி. வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்.
8. தியேட்டர்களில் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதியளிக்க வேண்டும்.
9. மின் கட்டணத்தை தவணை முறையில் கட்ட அனுமதிக்க வேண்டும்.
10. நகரங்கள், புற நகரங்களில் உள்ள தியேட்டர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், கிராமப் புறங்களில் உள்ள தியேட்டர்களுக்கு 5 லட்சம் ரூபாயையும் வட்டியில்லாத கடனாக வழங்க வேண்டும்.
என்று பல்வேறு கோரிக்கைகளை அரசிடம் முன் வைத்துள்ளார்கள்.

