சினிமா, சின்னத்திரை போஸ்ட் புரொடெக்சன்ஸ் வேலைகளைத் தொடர தமிழக அரசு அனுமதி..!

சினிமா, சின்னத்திரை போஸ்ட் புரொடெக்சன்ஸ் வேலைகளைத் தொடர தமிழக அரசு அனுமதி..!

திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் போஸ்ட் புரொடெக்சன்ஸ் பணிகளைத் தொடர தமிழக அரசு அனுமதித்துள்ளது.

இது தொடர்பாக இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி வரும் மே 11-ம் தேதி திங்கள்கிழமை முதல் இந்தப் பணிகளைத் துவக்கிக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

போஸ்ட் புரொடெக்சன்ஸ் பணிகளில் படத் தொகுப்பு, டப்பிங், விஷூவல் கிராபிக்ஸ், கிரேடிங், பின்னணி இசை, ஒலிக் கலவை ஆகிய பணிகளைத் தொடரலாம் என்றும், இவைகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணியாளர்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், பணியிடத்தில் சுத்தமான, சுகாதாரமான சூழலை ஏற்படுத்திக் கொடு்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Film Post Production Order

Our Score