இன்று தமிழகம் முழுவதும் வெளியாகவிருந்த ஜெய் ஆகாஷ் நடித்த ‘காதலுக்கு கண்ணில்லை’ படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து மீடியாக்களுக்கு அனுப்பப்பட்டிருக்கும் செய்தி இது.
‘காதலுக்கு கண்ணில்லை’ படத்தின் பெண் தயாரிப்பாளர் Y.இந்து. அப்படத்தின் தியேட்டர் ரிலீசுக்கு தியேட்டர்களை ‘புக்’ செய்து கொடுக்க மீடியேட்டராக சிவா என்பவரை வேலைக்கு சேர்த்தார்.
கடந்த சில நாட்களாக திடீரென்று நடு இரவில் தயாரிப்பாளர் இந்துவுக்கு மீடியேட்டர் சிவா போன் செய்து ‘செக்ஸ்’ டாச்சர் கொடுத்திருக்கிறார்.
பொறுமையிழந்த இந்து, சிவாவை நேரில் அழைத்து கண்டித்திருக்கிறார், அப்பொழுது காரில் அமர்ந்திருந்த இந்துவை கட்டிப் பிடித்து முத்தமிட முயற்சித்திருக்கிறார் சிவா. இதனால் மேலும் கோபம் அடைந்த இந்து, சிவாவை செருப்பால் அடித்து விரட்டியிருக்கிறார்.
மேலும் தன்னை பாதுகாத்துக்கொள்ள நீலாங்கரை காவல் நிலையத்தில் சிவா மீது புகாரும் பதிவு செய்திருக்கிறார் இந்து. இதையறிந்த சிவா தமிழகம் முழுவதம் இன்று ரிலீசாக வேண்டிய இந்த ‘காதலுக்குக் கண்ணில்லை’ படத்திற்கு ‘புக்’ செய்யப்பட்ட தியேட்டர்களுக்கு ஃபோன் செய்து படத்தை இன்று 31-10-2014 ரிலீஸ் செய்ய விடாமல் தடுத்து தலைமறைவாகி விட்டார்.
தயாரிப்பாளர் சங்கம் மற்றும் மீடியேட்டர் சங்கத்திலும் இது குறித்து சிவா மீது தயாரிப்பாளர் இந்து புகார் செய்திருக்கிறார். காவல்துறையும் சிவாவை தேடி வருகிறதாம். இதுபோன்ற புல்லுருவிகளை திரையுலகம் இனம் கண்டு தண்டிக்க வேண்டும்…!”
– இவ்வாறு தங்களது அறிக்கையில் கூறியிருக்கிறார்கள்.
மீடியேட்டர் சிவா தரப்பினர் தங்களது தரப்பு கருத்தினை அனுப்பி வைத்தால் அதையும் வெளியிடுவோம்..!