full screen background image

‘சிண்ட்ரெல்லா’ படத்தில் ‘திறமை’ காட்டியிருக்கும் ராய் லட்சுமி..!

‘சிண்ட்ரெல்லா’ படத்தில் ‘திறமை’ காட்டியிருக்கும் ராய் லட்சுமி..!

உலகெங்கும் தேவதைக் கதைகளில் வலம் வரும்  புகழ் பெற்ற பெயர் ‘சிண்ட்ரெல்லா’. இந்தப் பெயரில் தமிழில் ஒரு திகில் பேய்ப் படம் உருவாகி இருக்கிறது.

ராய் லட்சுமி இந்தப் படத்தில் பிரதான வேடம் ஏற்றிருக்கிறார். இவருடன் இணைந்து சாக்சி அகர்வாலும் நடித்திருக்கிறார். இவர்கள் தவிர ரோபோ சங்கர், ‘கல்லூரி’ வினோத், பாடகி உஜ்ஜயினி, கஜராஜ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

‘காஞ்சனா 2’ படத்திற்கு இசை அமைத்த அஸ்வமித்ரா இசையமைத்திருக்கிறார். தெலுங்கில் ‘லட்சுமி என்.டி.ஆர்.’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ராமி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை வினோ வெங்கடேஷ் இயக்கியுள்ளார் . இவர் எஸ்.ஜே.சூர்யாவிடம் பணி புரிந்து சினிமா கற்றவர்.

படம் பற்றி இயக்குநர் வினோ வெங்கடேஷ் பேசும் போது, “இது ஒரு பேய்ப் படம்தான். ஆனால் வழக்கமான பேய்ப் படங்களுக்கான பாணியில் இருந்து விலகி ஒரு விறுவிறுப்பான படமாக உருவாகி இருக்கிறது. ராய் லட்சுமி இப்படத்தில் ஏற்றுள்ள வேடம் அவருக்கு உள்ள  இமேஜை உடைக்கும்படி இருக்கும்.

அவருக்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். அவரை ஒரு கவர்ச்சிப் பதுமையாகப் பார்த்த ரசிகர்களுக்கு தோற்றத்திலும் நடிப்பிலும் மாற்றம் கொண்டதாக இருக்கும். நல்ல நடிப்பில் அவருக்கு உரிய இடத்தை பெற்றுத் தரும் படமாக ‘சிண்ட்ரெல்லா’ இருக்கும். சாக்ஷி அகர்வால்  ஏற்றுள்ள வில்லி பாத்திரம் யாரும் எதிர்பாராத பரபரப்புடன் இருக்கும்…” என்றார்.

இந்தப் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை  இயக்குநர் எஸ் .ஜே. சூர்யா இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இந்த வீடியோ காட்சி ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரே ஷாட்டில் படமாகி காட்சி வெளியாவது இதுவே முதல் முறையாகும்.

இது பற்றி இயக்குநர் வெங்கடேஷ் பேசும்போது, “இப்போது சாதாரணமாக எல்லாரும் ‘ஸ்னீக் பீக்’ கள் வெளியிடுகிறார்கள். நாம் ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று ஒரே ஷாட்டில் எடுக்க முயற்சி செய்தோம். அதில்  வெற்றியும் பெற்றோம். இக்காட்சி அப்படியே படத்தில்  வருகிறது.

ராய் லட்சுமி ஆடைகளைக் களைந்து விட்டு ஓடுவது போலவும் களையப்பட்ட அந்த ஆடை அமானுஷ்யமாக எழுந்து அசைந்து சுழன்று வருவது போலவும் வரும் அந்தக் காட்சி நிச்சயம் ரசிகர்களுக்குப் புதிய சிலிர்ப்பான  அனுபவமாக இருக்கும். இதை நாங்கள் ஒரே ஷாட்டில் எடுத்தோம்.

இந்த முயற்சியை எனது குருநாதரான இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா மிகவும் ரசித்துப் பாராட்டினார். ஸ்னீக் பீக்கைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்தினார்..” என்றார்.

விரைவில் இந்த ‘சிண்ட்ரெல்லா’ திரைப்படம் வெளியாக உள்ளது.

 
Our Score