விமல் நடிப்பில் உருவாகும் ‘சோழ நாட்டான்’ திரைப்படம்

விமல் நடிப்பில் உருவாகும் ‘சோழ நாட்டான்’ திரைப்படம்

நடிகர் விமல் தற்போது அதிகமான படங்களில் நடிக்கத் துவங்கியிருக்கிறார்.

விமல் நடிப்பில் வெளியான ‘களவாணி-2’ படம் சமீபத்தில் வெளியாகி இன்னமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், ஹரிஷ் பிலிம் புரொடெக்சன் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் பாரி வள்ளல் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க நடிக்கவிருக்கிறார் விமல்.

இந்தப் படத்திற்கு ‘சோழ நாட்டான்’ என்று பெயரிடப்பட்டுள்ளார்கள். இப்படத்தை இயக்குநர் பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்குகிறார், ‘மரகத காடு’ படத்தின் ஒளிப்பதிவாளர்  நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை மணி அமுதவன் மற்றும் சபரீஷ் இருவரும் எழுதுகிறார்கள்.

இப்படத்திற்கு இசையமைக்க பிரபல இசையமைப்பாளரிடமும், நாயகியாக நடிக்க முன்னணி நாயகி ஒருவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அவர்கள் யார் என்பதை படக் குழுவினர் அறிவிப்பார்கள்.

விமல்-வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் தயாராகியுள்ள ‘கன்னி ராசி’ படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இதை தொடர்ந்து ஜான் பீட்டர்-சிங்காரவேலன் கூட்டணியில் ஒரு புதிய படத்தில் விமல் நடிக்கிறார். இது தவிர, மலையாளத்தில் திலீப் நடிப்பில் வெளியான மை பாஸ் என்கிற படத்தின் ரீமேக்காக உருவாகும் ‘சண்டைக்காரி’ படத்திலும் கதாநாயகனாக விமல் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.