full screen background image

நடிகரும், பத்திரிகையாளருமான சோ ராமசாமிக்கு தலைவர்கள் அஞ்சலி

நடிகரும், பத்திரிகையாளருமான சோ ராமசாமிக்கு தலைவர்கள் அஞ்சலி

‘துக்ளக்’ இதழின் ஆசிரியரும், நடிகரும், பிரபல எழுத்தாளருமான சோ ராமசாமி உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 4.40 மணிக்கு அவருடைய உயிர் பிறந்த்து. அவருக்கு வயது 82.

ஆர்.சீனிவாசன், ராஜம்மாள் தம்பதியருக்கு 1934-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதியன்று சென்னையில் பிறந்தவர் சோ ராமஸ்வாமி. பள்லிப் படிப்பை மயிலாப்பூர் பி.எஸ்.உயர்நிலைப்பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை லயோலா கல்லூரியிலும் (இண்டர்மீடியேட்) விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்.சி பயின்றார்.

1953 முதல் 55-ம் ஆண்டு வரை சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று பி.எல்.பட்டம் பெற்றார். 1957-ல் இருந்து, 1962 வரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பிராக்டீஸ் செய்தவர், 1962-ல் இருந்து டி.டி.கே. நிறுவனத்தின் அனைத்து கம்பெனிகளுக்கும் லீகல் அட்வைஸராக பணியாற்றினார்.

1952-ல் இருந்து நடகங்கள் எழுதத் தொடங்கி நடிக்க ஆரம்பித்தார். பீம்சிங் இயக்கிய ‘பார் மகளே பார்’ படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். 200 தமிழ்ப் படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். 14 திரைப்படங்கள், 4 தொலைக்காட்சி தொடர்கள், 23 நாடகங்கள், 8 புத்தகங்களை எழுதியிருக்கிறார். ‘முகமது பின் துக்ளக்’, ‘உண்மையே உன் விலை என்ன’ உள்ளிட்ட 5 திரைப்படங்களையும் சோ இயக்கியிருக்கிறார்.

 

 

இவர் எழுதிய ‘இந்து மஹா சமுத்திரம்’, ‘மகாபாரதம் பேசுகிறது’, ‘இராமாயணம்’, ‘எங்கே பிராமணன்’ போன்ற புத்தகங்கள் பிரபலமானவை. இவரது ‘இந்து மகா சமுத்திரம்’ என்ற நூல் 6 தொகுதிகளாக வெளிவந்துள்ளது. 1971-ல் இவரது இயக்கத்தில் ‘முகமது பின் துக்ளக்’ திரைப்படம், இவருடைய திரையுலக வாழ்க்கையின் உச்சங்களில் ஒன்று.

cho-ramasamy-death-3

இவருடைய மனைவியின் பெயர் செளந்தர்யா. இவர்களுக்கு விஜயலட்சுமி என்கிற மகளும்,  ராஜகோபால் என்கிற மகனும் உள்ளனர்.

பகீரதன் என்பவர் எழுதிய ‘தேன்மொழியாள் மேடை’ நாடகத்தில் தான் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயரான ‘சோ’ என்பதையே தன் புனைப்பெயராக வைத்துக் கொண்டார்.

1970-ம் ஆண்டு ‘துக்ளக்’ இதழை தொடங்கினார். 1976-ல் Pick Wick ஆங்கில இதழையும் தொடங்கினார்.

தன்னுடைய நாடகங்கள், எழுத்துக்கள், திரைப்படங்களில் திராவிட இயக்கத்தைக் கடுமையாக விமர்சித்து வந்த சோ, காங்கிரஸ் கட்சியின் மீதும் தொடர் விமர்சனங்கள் முன்வைத்துவந்தார்.

திராவிட இயக்கம் முன் வைத்த நாத்திகம், சமூக நீதி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது, பெண்கள் சம உரிமை உள்ளிட்ட கருத்துக்களுக்கு எதிரான விமர்சனங்களைத் தொடர்ந்து அவர் முன்வைத்து வந்தார்.

1975-ஸல் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபோது, அதனைக் கடுமையாக எதிர்த்த சில பத்திரிகையாளர்களில் சோவும் ஒருவர்.

தீவிர வலதுசாரி சிந்தனையாளரான சோ, மக்கள் சிவில் உரிமைக் கழகத்திலும் சில காலம் இணைந்து செயல்பட்டார். ஈழப் பிரச்சனை குறித்த இவரது நிலைப்பாடுகள் தமிழகத்தில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகின.

1999ல் பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சியில் இருந்தபோது, மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட சோ, 2005 வரை அந்தப் பதவியில் இருந்தார். 

இவருடைய 6 வருட கால மாநிலங்களவை உறுப்பினர் காலக்கட்டத்தில் அவருக்குக் கிடைத்த உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி முழுவதையும் பயன்படுத்தி தமிழ்நாட்டில் பல ஊர்களில் மக்களுக்குப் பயன்படும் பல நல்ல காரியங்களைச் செய்திருக்கிறார்.

இவரது சிறந்த பத்திரிகை சேவைக்காக 1985-ம் ஆண்டு மேவார் மகாஹாஜா வழங்கிய ஹால்டி காட்டி விருதும், 1986-ம் ஆண்டு வீரகேசரி விருதும், 1974-ம் ஆண்டு கோயங்கோ விருதும், 1998-ம் ஆண்டு நச்சிகேதஸ் விருதும் பெற்றார்.

பிரதமர் மோடியின் ஆதரவாளராக கருதப்படும் சோவை பிரதமர் நரேந்திர மோடி இவரது வீட்டுக்கே வந்து நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

2015-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் சோ தொடர்ந்து மருத்துவனையிலும் வீட்டிலும் சிகிச்சை பெற்று வந்தார். பிறகு சில நாட்களுக்கு முன்பாக சுவாசப் பிரச்சனையின் காரணமாக மீண்டும் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சோ டிசம்பர் 7-ம் தேதி அதிகாலை காலமானார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பராக விளங்கிய சோ, அவர் காலமான அடுத்த நாள் காலமாகியிருக்கிறார்.

சென்னை அடையாறு எம்.ஆர்.சி.நகரில் உள்ள சோ-வின் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது.

cho-ramasamy-death-6

தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி,  கனிமொழி, தமிழிசை சௌந்தர்ராஜன், இல.கணேசன், திருமாவளவன், முத்தரசன், வைகோ, அன்புமணி ராமதாஸ், திருமாவளவன், வேல்முருகன், பட அதிபர் ஏவி.எம்.சரவணன், பிரமிட் நடராஜன், நடிகர்கள் சிவக்குமார், நாசர், கார்த்தி, விஷால், சூர்யா, சரத்குமார், அஜித், சூர்யா, கார்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், எஸ்.வி.சேகர், காத்தாடி ராமூர்த்தி, ஒய்.ஜி.மகேந்திரன், கிரேசி மோகன், கிரேசி பாலாஜி, இயக்குநர் முக்தா சீனிவாசன், சி.வி.ராஜேந்திரன், சித்ராலயா கோபு உட்பட பலர் அஞ்சலி செலுதினார்கள்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பலரும் சோவுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

தென்னிந்திய நடிகர் சங்கம் சோ மரணம் குறித்து வெளியிட்ட அறிக்கையில், 

“சோ.’

இந்த ஒற்றை வார்த்தைக்குப் பின் அடுக்கடுக்காய் பல படிமங்கள் தொகுத்து நிற்கின்றன. வழக்கறிஞராய், நாடகவியலாளராய், திரைப்பட நடிகராய், விமர்சகராய், பத்திரிகையாளராய் என நீண்டு கொண்டே போகின்றன.

ஆனால் ஒவ்வொரு படிமமும் இதுவரை யாரும் பதித்திராத வகையில் தனக்கென தனியொரு பாணி வகுத்தவர்.  மனதுக்கு பிடித்தோரை கண்முடித்தனமாய் பின்பற்றும் இன்றைய அரசியல் சூழலில், தான் ஆதரித்தோரை தவறுசெய்யும் போது கடுமையாக விமர்சித்தும், விமர்சிக்கப்பட்டவர் சரியானதொரு காரியம் செய்யும்போது பெருமனதோடு ஆதரிப்பதும்…. பத்திரிகையாளராய் அவருடைய முதிர்ச்சி பாராட்டுக்குரியது, பின்பற்றக்கூடியது.  

அன்னாரை இழந்து வாடும், உற்றத்தார், சுற்றத்தார், நாடகம், திரைப்படம் சார்ந்தோர், பத்திரிகையாளர் அனைவரோடு தென்னிந்திய நடிகர் சங்கம் அவரை பிரிந்த துக்கத்தில் பங்கு கொள்கிறது…

அவர் ஆன்மா சாந்தியடைவதாக..” என்று குறிப்பிட்டிருக்கிறது. 

 

Our Score