தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரான நடிகர் நாசரின் மகன் லுத்புதீன் கதாநாயகனாக நடித்திருக்கும், ‘பறந்து செல்ல வா’ திரைப்படம் வரும் டிசம்பர் 9-ம் தேதி வெளியாகவிருக்கிறது.
8 பாயிண்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் P.அருமைச்சந்திரன் இந்த படத்தைத் தயாரித்துள்ளார்.
முழுக்க முழுக்க சிங்கப்பூரில் படமாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் ஹீரோவாக லுத்ஃபுதீன், ஹீரோயினாக ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் நடித்திருக்கின்றனர். மேலும், கருணாகரன், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி ஆகிய காமெடி நடிகர்களும் சீன நடிகர் நரேல் கெங், நெருப்பு குணா, மதி, சுகன்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
சதீஷ், கருணாகரன், ஆர்.ஜே.பாலாஜி மூவரும் முதல்முறையாக இந்தப் படத்தில்தான் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒளிப்பதிவு – சந்தோஷ், இசை – ஜோஷ்வா ீீீீதர், பாடல்கள் – நா.முத்துக்குமார், படத் தொகுப்பு – M.V.ராஜேஷ்குமார், எழுத்து, சண்டை பயிற்சி – சன்னி பாங், இயக்கம் – தனபால் பத்மநாபன்.
இந்திய – சிங்கப்பூர் கலைஞர்களின் பங்களிப்பில் முழுமையான கமர்ஷியல் படமாக உருவாகிறது, ‘பறந்து செல்ல வா’. இத்திரைப்படம் ஒரு முழு நீள நகைச்சுவைக் காதல் படமாகவும் உருவாகியுள்ளது. படப்பிடிப்பு முழுவதும் சிங்கப்பூரில் நடைபெற்றது.
இத்திரைப்படம் சமீபத்தில் சென்சாருக்காக திரையிடப்பட்டு ‘யு’ சர்டிபிகேட்டை பெற்றுள்ளது. இந்தப் படத்தை தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான எஸ்.தாணு, தனது கலைப்புலி இண்டர்நேஷனல் மூலமாக உலகம் முழுவதும் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் வரும் வெள்ளிக்கிழமையான டிசம்பர் 9-ம் தேதியன்று திரைக்கு வரவிருக்கிறது.