full screen background image

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு..!

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு..!

சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். அதுபோல் சமீபத்தில் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் நடிகர் சிவன் சீனிவாசன் தலைமையிலான அணி அமோக வெற்றி பெற்றது.

இந்தப் புதிய அணியின் பதவியேற்பு விழாவும், சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டமும் இன்று காலை விருகம்பாக்கத்தில் இருக்கும் கோல்டன் பேரடைஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவர் சிவன் சீனிவாசன், பொதுச் செயலாளர் போஸ் வெங்கட், பொருளாளர் ஜெயந்த், துணைத் தலைவர்கள் பரத், ராஜ்காந்த் மற்றும் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்றனர்.

இந்த விழாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர்,  பெப்சியின் தலைவர் R.K.செல்வமணி, விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன், நடிகர் ரமேஷ் கண்ணா, இயக்குநர் பேரரசு, ஜாக்குவார் தங்கம், R.V.உதயகுமார், சோனியா போஸ் வெங்கட், பாபு கணேஷ், நிரோஷா, காத்தாடி ராமமூர்த்தி மற்றும் அனைத்து சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Our Score