நடிகர் சூர்யா நடித்த ‘சிங்கம்-3’ திரைப்படத்தை தயாரிப்பாளரின் அனுமதி இல்லாமல் எந்தவொரு இணையத்தளமும் வெளியிடக் கூடாது என சென்னை உயர் நீதி மன்றத்தில் சிங்கம்-3 திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஸ்டூடியோ கிரீன் K.E. ஞானவேல் ராஜா சார்பில் வக்கீல் விஜய் ஆனந்த் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி கல்யாணசுந்தரம், “சிங்கம்-3’ திரைப்படத்தை எவரும், எந்தவொரு இணைய தளத்திலும் தயாரிப்பாளரின் அனுமதி இல்லாமல் வெளியிடக் கூடாது…” என தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இதற்கு முன் இதேபோல் ரஜினிகாந்த் நடித்திருந்த ‘கபாலி’ திரைப்படத்தையும் யாரும் தயாரிப்பு நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் இணையத் தளங்களில் வெளியிடக் கூடாது என்று சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.