‘அம்முவாகிய நான்’ மற்றும் ‘மாத்தி யோசி’ ஆகிய திரைப்படங்களை தயாரித்தவர் சேகர் சீதாராமன். இவர் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படத்தின் பெயர் ‘சென்னை எழும்பூர்’.
ஜெயா பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் செல்வராஜ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
இந்தப் படத்திற்கு ராஜேஷ் ஒளிப்பதிவையும், G.K.B., இசையயும், R.K.செல்வன் படத் தொகுப்பையும், வேல்ராஜ் தயாரிப்பு மேற்பார்வையையும் கவனிக்கின்றனர்.
‘வளையல்’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமான A.குரு இப்படத்தை எழுதி இயக்குகிறார். இவர் சோனியா அகர்வால் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் ‘பருத்தி’ என்ற படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“கதையின் நாயகனாக சேகர் சீதாராமன் நடிக்கும் இத்திரைப்படம் சிறந்த கதையம்சத்தையும், விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட திரைப்படமாகவும் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்கிறார் இயக்குநர் குரு.
இந்தப் படத்திற்காக ஜி.கே.பி.யின் இசையில் ரம்மியமான பாடல்களும், அதனை முன்னணி பாடகர்களால் இனிமையாக பாடியும் பதிவு செய்யபட்டுள்ளன.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் இயற்கை அன்னை தாலாட்டும் இடங்களிலும், சென்னையின் மைய பகுதிகளிலும் வளர இருக்கிறது.










