full screen background image

சென்னை ஆல்பர்ட் தியேட்டர் சொத்து வரிக்காக ஜப்தி செய்யப்பட்டது..!

சென்னை ஆல்பர்ட் தியேட்டர் சொத்து வரிக்காக ஜப்தி செய்யப்பட்டது..!

சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கம் சென்னை மாநகராட்சி அதிகாரிகளால் இன்றைக்கு சீல் வைக்கப்பட்டது.

சென்னை எழும்பூர் பகுதியில் மிகவும் பிரபலமான திரையரங்கம் ஆல்பர்ட் தியேட்டர் காம்ப்ளக்ஸ். இந்தக் காம்பளக்ஸில் ஆல்பர்ட், பேபி ஆல்பர்ட் என்று இரண்டு திரையரங்குகள் உள்ளன. எழும்பூர் பகுதியில் இருக்கும் தியேட்டர் இது ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தியேட்டர் நிர்வாகம் பல ஆண்டுகளாக தியேட்டருக்குரிய சொத்து வரி மற்றும் கேளிக்கை வரியை செலுத்தவில்லை.

மொத்தமாக ஆல்பர்ட் திரையரங்கம் 51 லட்சத்து, 22 ஆயிரத்து 252 ரூபாய் சொத்து வரியாகவும் 14 லட்சம் ரூபாய் கேளிக்கை வரியாகவும் செலுத்த வேண்டுமாம்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி பல முறை நோட்டீஸ் அனுப்பியும் ஆல்பர்ட் திரையரங்கம் வரி செலுத்தாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக இன்று காலை அதிரடியில் இறங்கிய சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆல்பர்ட் திரையரங்கு வளாகத்தை பூட்டி சீல் வைத்துள்ளனர்.

2021-22-ம் நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்துவதற்கு இன்றுதான் கடைசி நாள் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Our Score