இயக்குநர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஸ்ரீகிரீன் புரொடக்சன்ஸ் சார்பாக எம்.எஸ்.சரவணன் வழங்க சற்குணம் இயக்கத்தில் அதர்வா மற்றும் ஆனந்தி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருக்கும் படம் ‘சண்டி வீரன்’.
வெளியான நாள் மூதல் நல்ல விமர்சனமும் மக்களிடையே வரவேற்பும் பெற்ற இந்த ‘சண்டி வீரன்’ படத்திற்கு சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
‘சண்டி வீரன்’ படத்தை பார்வையிட்ட சிங்கப்பூர் நாட்டின் திரைப்பட தணிக்கை குழு சிங்கப்பூர் காவல் துறையினரால் சிறைச்சாலையில் குற்றவாளிகளுக்கு நிறைவேற்றப்படும் ‘ரோத்தா’ என்னும் தண்டனையை படத்தில் விரிவாக, விஷுவலாக காட்டியிருப்பதாலும், படத்தின் முற்பாதியில் பல இடங்களில் வசனத்திலும் சொல்லப்பட்டிருப்பதாலும் இப்படத்தினை தடை செய்துள்ளார்கள்.
சிங்கப்பூரில் இப்படம் இதனாலேயே தடை செய்ய வாய்ப்புண்டு என்று தெரிந்தும் இந்தக் காட்சிகளை வைத்திருக்கும் இயக்குநர் சற்குணத்தின் தைரியத்தை பாராட்டுகிறோம்..!