full screen background image

‘கால் டாக்ஸி’ பட டீசரை வெளியிட்டார் நடிகர் விஜய் சேதுபதி

‘கால் டாக்ஸி’ பட டீசரை வெளியிட்டார் நடிகர் விஜய் சேதுபதி

கே.டி.கம்பைன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.கபிலா தயாரித்துள்ள திரைப்படம் ‘கால் டாக்ஸி’.

இந்த படத்தில் சந்தோஷ் சரவணன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக மெர்லின்’, ‘மரகத காடு’, ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’, ‘ஜீவி’ போன்ற படங்களில் நடித்த அஸ்வினி நடித்திருக்கிறார்.

மேலும், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மதன் பாப், இயக்குநர் ஈ.ராமதாஸ், ஆர்த்தி கணேஷ், ‘பசங்க’ சிவகுமார், ‘கான மஞ்சரி’ சம்பத்குமார், முத்துராமன் பெல்லி முரளி, சந்திரமௌலி, ‘போராளி’ திலீபன், சேரன் ராஜ் மற்றும் அஞ்சலி தேவி ஆகியோர் நடித்திருக்கின்றார்கள்.

எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்கள் எழுதி இசையமைத்திருக்கிறார் பாணர். சண்டை காட்சியகளை எஸ்.ஆர்.ஹரிமுருகனும் வடிவமைத்துள்ளார். படத் தொகுப்பை டேவிட்  அஜய் செய்துள்ளார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பா.பாண்டியன்.

தமிழகத்தில் தற்போதும் ஆங்காங்கே நடந்து வரும் கால் டாக்ஸி டிரைவர்கள் கொலை செய்யப்படுவதின் பின்னணியில் உள்ள உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த திரைப்படமாக இந்த கால்  டாக்ஸி’  திரைப்படம்  உருவாகியிருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் டீசரை மக்கள் செல்வன்’ விஜய்சேதுபதி, சமுத்திரக்கனி மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் இணைந்து வெளியிட்டிருக்கிறார்கள். 

Our Score