எந்த துறையிலும் புதியவர்களை தேர்வு செய்து அவர்களின் திறமைக்கேற்ப வாய்ப்பளிப்பது என்பது, தான் மதிக்கும் தொழிலை செழிக்க வைக்கும் செயல். அதிலும் சினிமா துறையில் புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பது என்பது எட்டாக் கனியாக இருக்கும் கனவை எட்டிப் பிடிக்க கை கொடுத்து உதவுவது போன்றதாகும்.
‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘தெகிடி’, ‘முண்டாசுப்பட்டி’, ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்து பல திறமையான புதியவர்கள் உருவாக்கிய தயாரிப்பாளர் சி.வி.குமாரின், திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தற்போது சிறந்த கதையம்சமுள்ள படங்களை மிகக் குறைந்த பட்ஜெட்டில் தயாரித்து அதனை இணையத்தில் மட்டுமே வெளியிடவுள்ளது.
இதன் முதல் கட்டமாக, அம்ஜத் மற்றும் லக்ஷ்மி பிரியா நடித்துள்ள ‘இஃக்லூ’ என்னும் படத்தை வரும் ஜூன் மாதம் இணையத்தில் வெளியிட ஆயுத்தமாகியுள்ளது.
ஸ்ரீஸ்டுடியோஸ் மற்றும் ஸ்ரீ & ஸ்ரீ புரடக்க்ஷன் தயாரித்து பரத் மோகன் இயக்கியுள்ள இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு – குகன் S.பழனி, படத் தொகுப்பு – பிரசன்னா G.K., கலை இயக்கம் – விஜய் ஆதிநாதன்.
படத்தின் டிரெயிலர் இது :