அதர்வா நடித்த ‘பூமராங்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்!

அதர்வா நடித்த ‘பூமராங்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்!

‘மசாலா பிக்சர்ஸ்’ என்ற தன்னுடைய சொந்த நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘பூமராங்’.

இத்திரைப்படத்தில் அதர்வா நாயகனாகவும், மேகா ஆகாஷ், இந்துஜா இருவரும் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். மேலும் உபென் படேல், சுஹாசினி மணிரத்னம், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ரதன் இசையமைத்திருக்கிறார். பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்திற்கு சென்சாரில் ‘யு ‘சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.

இது பற்றி பூமராங் இயக்குநர் கண்ணன் கூறும்போது, “எங்களது படத்திற்கு சென்சாரில் ‘யு’ சான்றிதழ் கிடைத்தருப்பதே எங்களுக்கு மிகப் பெரிய ஊக்கமாக இருக்கிறது.

ஒரு பரபரப்பான, நல்ல கதையை வைத்துக் கொண்டு, உலகளாவிய பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் விஷயங்களை கலந்து அவர்கள் ரசிக்கும்வகையில் படத்தை உருவாக்கித் தருவது என்பது மிகப் பெரிய சவால். ஆனால் ஒரு தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராக அதுதான் இன்றைய தேவை என்பதை நான் உணர்ந்திருந்தேன்.

‘பூமராங்’கின் படத்தின் கதை என் மனதில் எழுந்த உடன் அதை அனைத்து தரப்பு மக்களும் பார்த்து ரசிக்கும் வகையில் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம்தான் என் மனதில் உடனடியாக எழுந்தது.

சில சமயங்களில் சில நல்ல படங்கள் ‘யு/ஏ’ சான்றிதழால் அனைவரையும் சென்று சேர முடியாமலும் போகின்றன. எனவே இந்த உறுதியான முடிவை ‘பூமராங்’ படத்தின் திரைக்கதை எழுதும்போதும், படப்பிடிப்பின்போதும் என் மனதில் நினைத்துக் கொண்டேன். அதன்படியே இப்போது நாங்கள் எதிர்பார்த்தது போலவே ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது..” என்றார் பெருமையுடன்.

கோலிவுட் ஸ்ட்ரைக்கையும் தாண்டி, மிகவும் குறுகிய காலத்தில் இந்தப் படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர் கண்ணன்.

‘இமைக்கா நொடிகள்’ படத்தில் கிடைத்த பிரமாதமான வரவேற்புக்கு பிறகு, அதர்வாவின் நடிப்பில் வெளியாகவிருக்கும் இந்த ‘பூமராங்’ படத்துக்கான எதிர்பார்ப்பு மிகப் பெரிய அளவில் உருவாகியிருக்கிறது.

Our Score