தேனிலவுக்குச் செல்லும் புதுமணத் தம்பதிகளின் ஈகோ யுத்தமே ‘பூம் பூம் காளை’..!

தேனிலவுக்குச் செல்லும் புதுமணத் தம்பதிகளின் ஈகோ யுத்தமே ‘பூம் பூம் காளை’..!

ஒளிமார் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் J.தனராஜ் கென்னடி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘பூம் பூம் காளை.’

இந்தப் படத்தின் நாயகனாக பிரபல நடிகை அனுராதாவின் மகன் கெவின் நடித்துள்ளார். கதாநாயகியாக  சாரா தேவா நடித்துள்ளார். இவர் ‘சிவலிங்கா’ படத்தின் நாயகிகளில் ஒருவராக  நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், அப்புக்குட்டி, ‘காதல்’ அருண், சச்சு, கிரேன் மனோகர், அபிநயாஸ்ரீ உட்பட பலர் நடித்துள்ளனனர்.

ஒளிப்பதிவு – K.P.வேல்முருகன், படத் தொகுப்பு – யுவராஜ், இசை – P.R.ஸ்ரீநாத், பாடல்கள் – S.ஞானகரவேல், மக்கள் தொடர்பு – கே.எஸ்.கே.செல்வா, எழுத்து, இயக்கம் – ஆர்.டி.குஷால் குமார்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் ஆர்.டி.குஷால்குமார் பேசும்போது, “காதல் பொய்.. காமம்தான் நிஜம் என்று சொன்னால் உடனே பல பேர் எதிர்ப்புக் குரல் எழுப்புவார்கள். ஆனால், நிதானமாக யோசித்து பார்த்தால் இதில் உண்மையின் சதவீதம்தான் அதிகம் என்பது புரியும்.

நாயகன், நாயகி இருவரும் திருமணம் முடித்து தேனிலவுக்குச் செல்கிறார்கள். நாயகியோ கணவனுடன் அன்பாக பழகி, அதன் பின்னரே தாம்பத்ய உறவில் ஈடுபடவே விரும்புகிறாள்.. நாயகனோ திருமணம் முடிந்த பின் இனி அடுத்தது அந்த’ விஷயம்தானே.. அது நடப்பது எப்போது என ‘பூம் பூம் காளை’யாக அலை பாய்கிறான்.

இப்படி எதிரெதிர் கருத்துக்களைக் கொண்ட தம்பதிகளின் தேனிலவு நடந்ததா.. இல்லையா.. என்பதைத்தான் நகைச்சுவை கலந்து கொடுத்திருக்கிறோம்…” என்றார் இயக்குநர்.

வரும் மார்ச் 12-ம் தேதி திரைக்கு வரும் இந்தப் படத்தை ‘ஸ்ரீவெங்கடேஸ்வரா பிக்சர்ஸ்’ உலகமெங்கும் வெளியிடுகிறது.

Our Score