“விஜய் ஆண்டனி நிஜ வாழ்க்கையிலும் ஹீரோதான்..” – பாராட்டுகிறார் நடிகை ஆத்மிகா..!

“விஜய் ஆண்டனி நிஜ வாழ்க்கையிலும் ஹீரோதான்..” – பாராட்டுகிறார் நடிகை ஆத்மிகா..!

செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் T.D.ராஜா தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கோடியில் ஒருவன்.’

இந்தப் படத்தில் விஜய் ஆன்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். ஆத்மிகா நாயகியாக நடித்திருக்கிறார். இத்திரைப்படம் விஜய் ஆண்டனியின் 14-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்பதிவு – N.S.உதயகுமார், இசை – நிவாஸ் கே.பிரசன்னா, தயாரிப்பு – T.D.ராஜா, இணை தயாரிப்பு – கமல் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், B பிரதீப், பன்காஜ் போஹ்ரா, விக்ரம் குமார், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹமது. மெட்ரோ’ படத்தை இயக்கிய இயக்குநரான ஆனந்த கிருஷ்ணன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்க  Dr.தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார்.

படத்தின் நாயகனான விஜய் ஆண்டனி  படம் பற்றி பேசும்போது, “கொலைகாரன் படத்திற்குப் பிறகு இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் அருமையான படத்தை தந்துள்ளார். எதிர்காலத்தில் இவருடன் இன்னும் பல படங்களில்  நடிப்பேன். ஆத்மீகாவுடன் நடித்ததிலும் மகிழ்ச்சி . அவர் ஒரு திறமையான நடிகையும்கூட. நிவாஸின் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. சமீபத்தில் வெளியான மெலோடி பாடல் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது..” என்றார்.

படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகை ஆத்மிகா பேசும்போது, “இந்தப் படத்தில் நான் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஹீரோவுடன் இணைந்தே கடைசிவரையிலும் பயணிக்கக் கூடிய ஒரு கேரக்டர். இப்படத்தில் போஸ்டர்களில் ஹீரோவுக்கு இணையாக என் பெயரையும் சேர்த்தது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

கொரோன காலகட்டத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த அடுத்த சில நாட்களிலேயே இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கி விட்டார்கள். படப்பிடிப்பை நம்பி வாழும் ஊழியர்களையும், தொழிலாளர்களையும் மனதில் வைத்து விஜய் ஆண்டனி நடிக்க ஒப்புக் கொண்டு நடித்தார். விஜய் ஆண்டனி ஸார் ரியல் லைஃபிலும் ஹீரோதான்..” என்றார்.

படத்தை பற்றி இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் பேசும்போது, “இந்தக் ‘கோடியில் ஒருவன்’ படத்தில் ஆண்டனி டியூசன் மாஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘மெட்ரோ’ படத்தை பார்த்து எனக்கு இந்த படத்தை இயக்க வாய்ப்பளித்தார்.

இந்தப் படத்தில் அரசியலால் சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும், சிக்கலைகளையும்  மற்றும்   கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இது முழுக்க, முழுக்க ஒரு ஜனரஞ்சகமான விறுவிறுப்பான படம்..” என்றார்.

விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான Dr.தனஞ்செயன் பேசும்போது, “கோடியில் ஒருவன் என்ற இந்தப் பாசிட்டிவான படத் தலைப்பு விஜய் ஆண்டனிக்கு அமைந்துள்ளது. ஆனந்த கிருஷ்ணன்  திறமையான இயக்குர். இந்தப் படத்தை நாங்கள் வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி. கொரோனா காலகட்டத்திலும் அனைவரின் ஒத்துழைப்போடும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது.

விஜய் ஆண்டனி இந்தப் படத்தில்தான் முதன்முதலாக எடிட்டராக அவதாரம் எடுத்துள்ளார். விஜய் ஆண்டனி  கடுமையான உழைப்பாளி. படப்பிடிப்பு நடக்கும்போதே ஷூட் முடித்ததும் மறுபுறம் எடிட்டிங் வேலைகளை கவனிப்பார்.

படத்தின் முதல் பாதி அருமையாக வந்துள்ளது. இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறோம்…” என்றார்.

Our Score