full screen background image

கட்டைக் கூத்து கலையைப் பற்றிப் பேச வரும் ‘பொம்மி வீரன்’ திரைப்படம்..!

கட்டைக் கூத்து கலையைப் பற்றிப் பேச வரும் ‘பொம்மி வீரன்’ திரைப்படம்..!

உழவன் திரைக்களம் சார்பாக கவிஞர் சினேகன் தயாரித்து – நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘பொம்மி வீரன்.’

பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் வெகுவேகமாக அழிந்து வரும் கலையான கட்டைக் கூத்தை மையமாக கொண்டது இத்திரைப்படம்.

ஒரு கட்டைக் கூத்து கலைஞனின் வாழ்வை, அதன் பல்வேறு பரிமாணங்களை, மண்ணின் மணமும், குணமும், இயல்புகளும் மாறாமல், விவரிக்கும் ஒரு உணர்வுப்பூர்வமானத் திரைப்படம்.

இப்படத்தில் கட்டைக் கூத்து கலைஞனாக நடித்திருக்கும் கவிஞர் சினேகன், அதற்கென சிறப்பு பயிற்சிகள் எடுத்து நடித்திருக்கிறார். இவருக்கு இணையாக  நடித்திருக்கும் நாட்டியா, இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகிறார்.

015

மேலும் கே.பாக்யராஜ், ஊர்வசி, சிங்கம்புலி, பவர்ஸ்டார், முத்துக்காளை, சந்தான பாரதி, போண்டாமணி, இ.ராமதாஸ், டிபி கஜேந்திரன், ‘தாரை தப்பட்டை’ ஆனந்தி, கனிகா மற்றும் பலர் உள்ளிட்ட பல சிறப்பான கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள்.

சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்ய, ராம் சுதர்சன் படத் தொகுப்பை கவனித்து இருக்கிறார். தாஜ்நூர் இசையமைக்க, கவிஞர் சினேகன் பாடல்களையும் எழுதி இருக்கிறார். கலை இயக்குநர் மார்டின் டைட்டஸ் காட்சிகளுக்கு அழகு சேர்க்க, விஜய் ஜாக்குவார் அதிரடி காட்சிகளுக்கு விறுவிறுப்பு சேர்த்திருக்கிறார்.

அறிமுக இயக்குநரான ரமேஷ் மகாராஜன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தின் முதல் கட்ட போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. படத்தின் பாடல் வெளியீட்டு விழா விரைவில் நடக்கவுள்ளது.

Our Score