full screen background image

கல்யாணத்துக்கு முதல் நாள் இரவில் நடக்கும் கதைதான் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம்..!

கல்யாணத்துக்கு முதல் நாள் இரவில் நடக்கும் கதைதான் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம்..!

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘ஜீவி’ போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் காலகட்டம் இது. இந்த சூழலில் நல்ல கதையம்சத்துடன் அடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘போதை ஏறி புத்தி மாறி’.

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீனிதி சாகர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

தீரஜ், துஷாரா மற்றும் பிரதாயினி சுர்வா, அர்ஜூனன், செந்தில், ரோஷத் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – பாலசுப்ரமணியம், இசை – கே.பி., படத் தொகுப்பு – சாபு ஜோஸப், கலை இயக்கம் – கோபி ஆனந்த், எழுத்து, இயக்கம் – கே.ஆர்.சந்துரு.

இத்திரைப்படம் வரும் ஜூலை 12, வெள்ளிக்கிழமையன்று வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரி்ல் நடைபெற்றது.

IMG_1479

இந்த நிகழ்ச்சியி்ல படக் குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சாகர் பேசும்போது, “இந்த ‘போதை ஏறி புத்தி மாறி’ தலைப்புக்கு முதலில் நிறைய எதிர்ப்புகள் வந்தன. ஆனால் இந்த தலைப்புதான் வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்.

நான் படத் தயாரிப்பில் இறங்கியபோது நிறைய கதைகள் கேட்டேன். கேட்ட அனைத்துமே ஏற்கனவே கேள்விப்பட்ட கதைகளாகவே இருந்தன. அந்த சமயத்தில்தான் இயக்குநர் சந்துரு இந்தப் படத்தின் ஒன் லைனை சொன்னார். மிக நன்றாக இருந்தது, அப்போதே முழு கதையையும் சொல்லச் சொல்லி கேட்டேன். அடுத்து என்ன என்பதை கணிக்க முடியாத அளவுக்கு மிகச் சிறப்பாக எழுதியிருந்தார்.

ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் சார் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய தூணாக இருந்தார். ஒரு சிறிய இடத்தில் படம் பிடிக்க வேண்டிய நிறைய சவால்கள் இருந்தாலும் மிகச் சிறப்பான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார். நாயகன் தீரஜ் ஒரு மருத்துவர். அவர் இந்த படத்தில் மிகப் பெரிய உழைப்பை கொடுத்திருக்கிறார். கே.பி.யின் இசை படத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. பிரதாயினி, துஷாரா இருவருமே அழகான, திறமையான நாயகிகள்.

கடந்த மாதம் படத்தைப் பார்த்த, தணிக்கைக் குழுவினர், எல்லோரும் கண்டிப்பா பார்க்கணும் என சொல்லி படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கொடுத்தனர்…” என்றார்.

படத் தொகுப்பாளர் சாபு ஜோசஃப் பேசும்போது, “பள்ளி நண்பர்கள் எல்லாம் சேர்ந்து இந்தப் படத்தை பண்ணியிருக்கிறோம். தீரஜை வைத்து ஒரு படம் பண்ணலாமா என கேட்டார் இயக்குநர். முதல் பட இயக்குநருக்கு எப்போதுமே ஒளிப்பதிவுதான் பக்க பலம். பாலசுப்ரமணியம் சார்தான் ஒளிப்பதிவாளர் என்று தெரிந்த பிறகு எனக்கு நம்பிக்கை அதிகமானது. ஒரு படத்தில் வேலை செய்த அசதியே இல்லை, நிறைய விஷயங்கள் முயற்சி செய்து பார்க்க முடிந்தது…” என்றார்.

IMG_1326

நடிகர் ஆஷிக் பேசும்போது, “சீமராஜா’ படம் பார்த்துவிட்டு வரும்போது, எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. என்னை நடிக்க கேட்டார்கள், யாரோ கலாய்க்கிறார்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால் உண்மையில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. இயக்குநர் மிகவும் அமைதியானவர். புது நடிகரிடம்.கூட மிகவும் எளிமையாக பழகுபவர். இது ஒரு நல்ல, வித்தியாசமான முயற்சி, எல்லோருக்கும் பிடிக்கும்..” என்றார் நடிகர் ஆஷிக்.

இசையமைப்பாளர் கே.பி. பேசும்போது, “பள்ளி நாட்களில் இருந்தே எனக்கு இசையின் மீது ஆர்வம். தீரஜும், நானும் அப்போதில் இருந்தே நண்பர்கள். ‘நான் படம் பண்ணா நீதான் இசையமைப்பாளர்’ என சொன்னார். அது இப்போது நிகழ்ந்திருக்கிறது. படத்துக்கு என்னவெல்லாம் தேவையோ அதை எல்லாம் கொடுத்தார் தயாரிப்பாளர்.

தீரஜ் ஒரு டாக்டராக இருந்தாலும், அனுபவம் வாய்ந்த நடிகர் போல நடித்திருக்கிறார். பிரதாயினி ஒரு சூப்பர் மாடல், அவரின் முதல் திரைப்படம் இது. பின்னணி இசைக்கு முக்கியத்துவம் உள்ள படம். இந்த படத்தில் மொத்தம் 3 பாடல்கள். ஒரு பாடலை யோகி பாடியிருக்கிறார். சமீபத்தில் முழு படத்தையும் பார்த்தோம், மிகச் சிறப்பாக வந்திருக்கிறது…” என்றார்.

IMG_1484

ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம் பேசும்போது, “உதயநிதி சார் மூலம்தான் எனக்கு தீரஜ் அறிமுகம். அவர் ஒரு மருத்துவர். என் மனைவி மிகவும் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது உயிரை கொடுத்து காப்பாற்றியவர் தீரஜ். அந்த நன்றிக் கடனுக்கு நான் செய்த படம்தான் இது. இயக்குநர் ஜெட் ஏர்வேஸில் பணிபுரிந்தவர். நல்ல கதையுடன் வந்தார். இது மிகச் சிறந்த படமாக வந்திருக்கிறது…” என்றார்.

IMG_1376

நடிகை துஷாரா பேசும்போது, “சின்ன வயதில் இருந்தே நடிகையாகும் கனவு மட்டுமே எனக்கு இருந்தது. படத்தில் நான் திரையில் தோன்றும் நேரம் மிகக் குறைவுதான். ஆனாலும் இந்த மாதிரி ஒரு நல்ல படத்தில் நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது…” என்றார்.

IMG_1403

நடிகை பிரதாயினி பேசும்போது, “நான் சினிமாவில் நடிப்பேன் என்று நினைத்ததே இல்லை. இயக்குநர் சந்துரு என்னிடம் நடிக்க கேட்டபோது, ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாமே என்று நினைத்து உடனேயே ஓகே சொல்லி விட்டேன். மைம் கோபி சாரிடம் கொஞ்சம் நடிப்பு பயிற்சி எடுத்தேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. அடுத்து என்ன, அடுத்து என்ன என யோசிக்க வைக்கும் படமாக இருக்கும். எனக்கு பிடித்த மாதிரியே உங்களுக்கும் இந்த படம் நிச்சயமாகப் பிடிக்கும்…” என்றார்.

IMG_1464

இயக்குநர் கே.ஆர்.சந்துரு பேசும்போது, “இது ஒரே வீட்டில் நடக்கும் கதை. படத்தில் எல்லோருமே மிகவும் சிறப்பாக நடித்துள்ளனர். தெலுங்கு நடிகர் அஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்துக்கு சவுண்ட் மிக்ஸிங் ஒரு முக்கிய அம்சம். ஒட்டு மொத்தக் குழுவும் எனக்கு ஆதரவாக இருந்தனர். நான் ஒரு ரசிகனாக இந்த படத்தை எடுத்திருக்கிறேன். தலைப்புக்கு மிகவும் பொருத்தமான படமாக இருக்கும்…” என்றார்.

Bodhai-Yeri-Budhi-Maari-Movie-Stills-1

படத்தின் நாயகனான நடிகர் தீரஜ் பேசும்போது, “சிறுவயதில் இருந்தே நடிக்கும் ஆசை எனக்கு இருந்தது. என் ஆசைக்காக நேரம் கிடைக்கும்போது நடிக்க ஆசைப்படுகிறேன். அதே நேரத்தில் நான் படித்த மருத்துவத்தை கைவிடாமல், தினமும் அறுவை சிகிச்சை செய்து கொண்டுதான் இருக்கிறேன்.

ஸ்கூல் பசங்க எல்லாம் சேர்ந்து படம் எடுத்திருக்கோம்னு நண்பர்கள் சொன்னாங்க. எங்களுக்கு ஹெட் மாஸ்டராக இருந்தவர் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் சார்தான். அவர் இல்லையேல் இந்தப் படம் சாத்தியமாகி இருக்காது, வரும் ஜூலை 12-ம் தேதி இந்த படம் வெளியாகிறது…” என்றார்.

இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் பாடலாசிரியர் முத்தமிழ், நடன இயக்குநர் ஷெரிஃப், நடிகர்கள் அர்ஜூனன், செந்தில், ரோஷன், சரத் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

Our Score