SRT எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஒரு புதிய படத்தைத் தயாரிக்கின்றன. இப்படம் மிகப் பெரும் பொருட்செலவில் சிறப்பாக எடுக்கப்பட இருக்கிறது.
இந்தப் படத்தில் பாபி சிம்ஹா ஹீரோவாக நடிக்கிறார். பாபி சிம்ஹாவிற்கு ஜோடியாக அழகான நடிகையான காஷ்மீரா பர்தேஷி நடிக்கிறார்.
ஒளிப்பதிவு பொறுப்பை சுனில் S.K. ஏற்றுள்ளார்.
ஒரு நல்ல கதையை ரசிகனின் மனதுக்கு நெருக்கமாக கொண்டு போக இசை மிகவும் முக்கியம். அந்த வகையில் தரமான இசையை வழங்க இருக்கிறார் ராஜேஷ் முருகேசன்.
அதிரடி சண்டைக் காட்சிகளுக்கென பெயர் பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா சண்டை இயக்கத்தைக் கவனிக்கிறார்.
‘பேட்டை’, ‘இறைவி’ போன்ற படங்களுக்கு படத் தொகுப்பாளராக இருந்து ஜிகர்தண்டா படத்திற்கு தேசிய விருதையும் பெற்றுள்ள படத் தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் இப்படத்தின் தொகுப்பாளராகப் பொறுப்பேற்றுள்ளார்.
அழகான ஆடை வடிவமைப்பால் அசத்த இருக்கிறார் காஸ்ட்யூம் டிசைனர் நந்தினி N.K.
படத்தின் மொத்த புரொடக்ஷன் விசயங்களையும் தன் பொறுப்பில் ஏற்றுள்ளார் நாகராஜ் R.K.
ஒரு படத்தின் பூஜையில் இருந்து ரிலீஸ் வரையில் பப்ளிசிட்டி மிக முக்கியம். அப்பொறுப்பை டூனி ஜான் ஏற்றுள்ளார்.
இப்படத்தை எழுதி இயக்குபவர் ரமணன் புருஷோத்தமா. மிக வித்தியாசமான கதைக் களத்தைக் கையில் எடுத்துள்ளார்.
இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு பிரம்மாண்டமாக துவங்கியது. இதன் துவக்க விழாவில் படக் குழுவினர் உட்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
தேர்ந்த கதைகளில் நடிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ள நடிகர்களில் பாபி சிம்ஹாவும் ஒருவர். அதனால் அவர் தலைமை பாத்திரம் ஏற்றிருக்கும் இப்படம் தரமான கதையம்சத்தோடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.