இயக்குநர் ஆர்.கண்ணனின் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ‘பிஸ்கோத்’ திரைப்படம்.

இயக்குநர் ஆர்.கண்ணனின் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ‘பிஸ்கோத்’ திரைப்படம்.

இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து, எழுதி, இயக்கும் படம் ‘பிஸ்கோத்’. இந்தப் படத்தில் சந்தானம் நாயகனாக மூன்று வேடங்களில் நடிக்கிறார். சந்தானத்திற்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி மற்றும் சுவாதி முப்பாலா இருவரும்  நடிக்கிறார்கள்.

மேலும், ஆனந்த்ராஜ், சௌகார் ஜானகி, ‘மொட்ட’ ராஜேந்திரன், சிவசங்கர், ‘லொள்ளு சபா’ மனோகர் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் 'சௌகார்' ஜானகி சந்தானத்தின் பாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது அவருக்கு 400-வது படம்.

_MG_3632

இசை – ரதன், ஒளிப்பதிவு – சண்முகசுந்தரம், படத் தொகுப்பு - ஆர்.கே.செல்வா, கலை இயக்கம் – ராஜ்குமார், சண்டை இயக்கம் – ஹரி, நடன இயக்கம் – சதீஷ், மக்கள் தொடர்பு – ஜான்சன், தயாரிப்பு மேற்பார்வை - ராஜா ஸ்ரீதர், தயாரிப்பு - ஆர்.கண்ணன், எழுத்து, இயக்கம் - ஆர்.கண்ணன்.

ஏற்கெனவே இயக்குநர் கண்ணனின் இயக்கத்தில் 'ஜெயம் கொண்டான்' மற்றும் 'கண்டேன் காதலை' ஆகிய படங்களில் நகைச்சுவை வேடத்தில் சந்தானம் நடித்திருந்தார். ஆனால், சந்தானத்தை கதாநாயகனாக வைத்து கண்ணன் படம் இயக்குவது இதுவே முதல் முறை.

பிஸ்கட் கம்பெனியில் சாதாரணமாக பணியாற்றுபவன் எப்படி உயர் பதவிக்கு செல்கிறான் என்பதே இப்படத்தின் கதை.

_MG_8430

இப்படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கிறார். அதில் ஒன்று 'சகலகலாவல்லவன்' கமல் போன்ற வேடம். இதே வேடத்தில் 1985-ம் வருடத்து பாணியில் ஒரு சண்டைக் காட்சியும் இருக்கிறது. அதேபோல், ஐதராபாத்தில் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் உள்ளதுபோல் அரண்மனை தளம் அமைத்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது.