மஞ்சு மனோஜ் நடிக்கும் ‘அஹம் பிரம்மாஸ்மி’ படம் துவங்கியது..!

மஞ்சு மனோஜ் நடிக்கும் ‘அஹம் பிரம்மாஸ்மி’ படம் துவங்கியது..!

தெலுங்குலகின் மூத்த நடிகரான மோகன்பாபுவின் மகனான மஞ்சு மனோஜ் நடிக்கும் ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்னும் திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் தயாராகிறது.

இந்த ‘அஹம் பிரம்மாஸ்மி’ திரைப்படத்தை MM Arts நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் மஞ்சு மனோஜ் மற்றும் நிர்மலா தேவி இருவரும் தயாரிக்கிறார்கள். வித்யா நிர்வாணா, மஞ்சு ஆனந்த் இருவரும் இப்படத்தினை வழங்குகிறார்கள். படத்தில் மனோஜ் மஞ்சுவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

இந்தப் படத்திற்கு அச்சு ராஜாமணி, ரமேஷ் தமிழ்மணி இருவரும் இசையமைத்துள்ளார்கள். சன்னி குருபாதி ஒளிப்பதிவு செய்கிறார். ராமஜோகய்யா சாஸ்த்ரி மற்றும் ஆனந்த் ஶ்ரீராம் இருவரும் பாடல்கள் எழுதியுள்ளனர். தம்மிராஜு படத் தொகுப்பு செய்கிறார். ஏ.எம்.விவேக் கலை இயக்கம் செய்கிறார். பீட்டர் ஹெய்ன் சண்டைப் பயிற்சி இயக்குநராகப் பணியாற்றுகிறார். திவ்யா நாரயணன், கல்யாண் சக்ரவர்த்தி இருவரும் கூடுதல் வசனங்களை எழுதியுள்ளனர். தீபக் போஜ்ராஜ் விளம்பர வடிவமைப்பு செய்கிறார். தொட்டம்புடி சுவாமி இணை இயக்கம் செய்ய, வெங்கட் சல்லகுல்லா நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் இயக்குநர் ஶ்ரீகாந்த் N.ரெட்டி.

நேற்றைக்கு வெளியான இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரே சினிமா ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கிறது.

ஃபர்ஸ்ட் லுக்கில் விபூதி அணிந்து வித்தியாச தோற்றத்தில்  நகைப்பு, ரௌத்திரம், அமைதி என மூன்று பாவங்களை வெளிப்படுத்தும் மஞ்சு மனோஜின் தோற்றம் அனைவரையும் ஈர்த்து  தீயாக பரவி வருகிறது.

இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ‘மெகா பவர் ஸ்டாரான’ ராம் சரண் சிரஞ்சீவி கலந்து கொண்டு கிளாப் அடித்து படத்தினைத் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் மஞ்சு மனோஜ், நாயகி பிரியா பவானி சங்கர், நடிகர் மோகன் பாபு, தயாரிப்பாளர் நிர்மலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

aham-brammaashmi-pojai-stills-1 aham-brammaashmi-pojai-stills-2 aham-brammaashmi-pojai-stills-3 aham-brammaashmi-pojai-stills-4 aham-brammaashmi-pojai-stills-5

Our Score