full screen background image

வைரமுத்து-பாரதிராஜா மேடையிலேயே பகிரங்க மோதல்..!

வைரமுத்து-பாரதிராஜா மேடையிலேயே பகிரங்க மோதல்..!

நேற்று இரவு இயக்குநர் சேரனின் C2H நிறுவனத்தின் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் இமயம் பாரதிராஜா, “நான் அதிகமா மேடைகளில் பேசுவதில்லை. ஏன்னா நான் ஏதாவது பேசப் போய் அது வேறு மாதிரி அர்த்தமாகி பிரச்சினையாகிவிடுகிறது.. இப்படித்தான் நேற்றைக்கு ஒரு பஞ்சாயத்தாகி ஓடி வந்திருக்கிறேன்..” என்றார்.

அதென்ன ‘பஞ்சாயத்து’ என்று விசாரித்தால் கிடைத்த விஷயம் இதுதான்..

வைரமுத்துவின் 60-வது பிறந்த நாளையொட்டி கோவையில் கவிஞர்கள் திருவிழா நேற்றைக்கு முன்தினம் நடந்துள்ளது. இந்த மேடையில் வைரமுத்துவுக்கும், பாரதிராஜாவுக்கும் இடையில் முட்டல் மோதல் நடந்துள்ளதாம்..

பாரதிராஜா மிக உரிமையோடு வைரமுத்துவை ‘அவன்’, ‘இவன்’ என்றும் ‘வாடா’ ‘போடா’ என்றும் மைக்கில் பேசிவிட்டார்.

இதைத் தொடர்ந்து பேசிய வைரமுத்து பாரதிராஜா, இளையராஜாவையே ‘வாடா’, ‘போடா’ என்று உரிமையோடு பேசுபவர் என்றாலும், மேடைகளில் அப்படியே பேசுவதும், அழைப்பதும் தவறு என்று கண்டித்திருக்கிறார்.

உடனேயே அப்போதே எழுந்து வந்து மைக்கை பிடித்த பாரதிராஜா, “இவர் அளவுக்கு தமிழெல்லாம் எனக்குத் தெரியாது.. நான் ஒரு பாமரன்.. எனக்குத் தெரிஞ்சதை.. மனசுல பட்டதை சொன்னேன். அவ்வளவுதான்..” என்று சொல்லிவிட்டு மேடையில் இருந்து இறங்கி வெளியேறிவிட்டாராம்..!

இதுதான் நடந்த கதை என்கிறது கோவை பத்திரிகையாளர் வட்டாரம்..!

பாரதிராஜாவின் திடீர் கோபத்துக்குக் காரணம்.. வைரமுத்து தேவையில்லாமல் இளையராஜாவை இதில் இழுத்துவிட்டதுதானாம்..

ஏற்கெனவே ‘அன்னக்கொடி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் “நான், நீ, வைரமுத்து மூவரும் மீண்டும் இணைய வேண்டும்.. அந்தக் காலத்தை திரும்பத் தொடங்க வேண்டும்…” என்று பேசினார் பாரதிராஜா

இதற்கடுத்து சில நாட்களில் ‘குமுத’த்தில் தான் எழுதிய கேள்வி பதிலில் இதற்கு பதிலளித்த இளையராஜா, “இதை மேடையில் இல்லாமல், நேரில் சொல்லியிருந்தால் நான் என்ன பதில் சொல்லியிருப்பேன் என்பது பாரதிராஜாவுக்கே தெரியும்..” என்று சொல்லி பாரதிராஜாவை கடுமையாகத் தாக்கியிருந்தார்.

இதற்குப் பின்பு இப்போதுவரையிலும் இளையராஜா பாரதிராஜாவிடம் பேசுவதே இல்லையாம்.. இந்த நிலைமையில் இதுவும் சேர்ந்தால் உண்மையாகவே வைரமுத்து லிஸ்ட்டில் தன்னையும் இளையராஜா சேர்த்துவிடுவார் என்று பயந்தே பாரதிராஜா திடீர் வெளிநடப்பு செய்திருப்பதாக பத்திரிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..!

Our Score