full screen background image

பழந்தமிழரின் மருத்துவ கண்டுபிடிப்புகள்‌ பற்றிப் பேசும்‌ ‘பெல்‌’ திரைப்படம்..!

பழந்தமிழரின் மருத்துவ கண்டுபிடிப்புகள்‌ பற்றிப் பேசும்‌ ‘பெல்‌’ திரைப்படம்..!

இயற்கை மருத்துவ சிறப்பு மற்றும் மாமுனிவர் அகஸ்தியர்  சொன்ன  6 ரகசியங்கள் பற்றிப் பேசும் படமாக உருவாகியுள்ளது ‘பெல்’ திரைப்படம்.

இந்தப் படத்தில் குரு சோமசுந்தரம், ்ரீதர் மாஸ்டர், நிதீஷ் வீரா,  பீட்டர் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இயக்குநர் – R.வெங்கட் புவன், கதை & வசனம் – வெயிலோன், ஒளிப்பதிவு – பரணிக்கண்ணன், படத் தொகுப்பு – தியாகராஜன், இசை – ராபர்ட், கலை இயக்கம் – நட்ராஜ், சண்டை இயக்கம் – Fire கார்த்திக், பாடல்கள் – பீட்டர் ராஜ், நடன இயக்கம் – தீனா, சிகை அலங்காரம் – கணபதி, பத்திரிகை தொடர்பு – வேலு, புகைப்படங்கள் – குமரேசன், விளம்பர வடிவமைப்பு – ஷபீர், நிர்வாக தயாரிப்பு – கிருஷ்ணகுமார் & அழகர், DI வண்ணம் – ராகேஷ், ஆடை வடிவமைப்பு : சிவகார்த்திக், தயாரிப்பு பதாகை – ப்ரோகன் மூவிஸ்.

இத்திரைப்படம்‌ குறித்து இயக்குநர்‌ வெங்கட்‌ புவன்‌ பேசும்போது, “பல நூறு ஆண்டுகளுக்கு முன்‌ வாழ்ந்த அகஸ்திய மாமுனிவர்‌, பாதுகாக்கப்படவேண்டிய 6 ரகசியங்களை தனது நம்பிக்கைக்குரிய 6 சீடர்களுக்குச்‌ சொல்லி அதை பாதுகாக்கவும்‌ கட்டளையிட.. ரகசியங்ளைப்‌ பாதுகாப்பதில்‌ நன்மைக்கும்,‌ தீமைக்கும்‌ இடையே நடந்த போராட்டமே படத்தின்‌ மையக் கதையாகும்‌.

நான்லீனியர்‌ முறையில்‌ காதல்‌, குடும்பம்‌, ஆக்ஷன்‌ என அனைத்து அம்சங்களும்‌ மிகச்‌ சரியான விகிதத்தில்‌ கலந்த கலவையாக அமைந்த படமாக இந்த ‘பெல்’‌ இருக்கும்‌. இது அனைத்து வயதினருக்கும்‌ ஏற்ற படமாகவும் இருக்கும்‌..”  என்றார்.

சென்சார்‌ பணிகள்‌ முடிவடைந்து வரும் ஜூன் மாதம் இந்த பெல்’‌ திரைப்படம் வெளியாகிறது.

Our Score