இந்த வருடத்தின் மிக பிரம்மாண்டமான படம் என இந்திய திரைப்பட துறையே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் படம் ‘பேங் பேங்’.
இந்திய இளம் பெண்களின் கனவு நாயகன் ஹிரிதிக் ரோஷன் – இளைஞர்களின் கனவு நாயகி கத்ரீனா கைப் ஜோடியாக நடித்திருக்கும் இந்த ‘பேங் பேங்’ படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் தமிழ்ப் பாடல்கள் இந்த மாதம் இசை வடிவமாக வெளி வருகிறது. ஹிந்தியில் வெளிவந்த இந்த படத்தின் பாடல்கள் மிகப் பெரிய ‘Hit ‘ என கூறப்படுகிறது.
தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் உள்ள இளைஞர்கள் மத்தியில் ஹிரிதிக் ரோஷனுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. அவரது படங்களில் உலக தரத்துடன் ஒப்பிடக்கூடிய அதிரடி சண்டை காட்சிகள் இருக்கும். அந்த எதிர்பார்ப்பை இந்த ‘பேங் பேங் ‘ நிச்சயம் பூர்த்தி செய்யும் என்று நம்பலாம்.
தமிழில் இந்த படத்துக்கான பாடல்களை மதன் கார்க்கி எழுதியுள்ளார். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்த படம் வரும் அக்டோபர் 2-ம் தேதி உலகெங்கும் வெளியிடப்படுகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த படத்தின் போஸ்டர்கள் படம் பற்றிய எதிர்பார்ப்பை ஏகத்திற்கும் எகிற வைத்திருக்கிறது.