full screen background image

சிறந்த குறும் படங்களுக்கான பாலுமகேந்திரா விருது அறிவிப்பு..!

சிறந்த குறும் படங்களுக்கான பாலுமகேந்திரா விருது அறிவிப்பு..!

இயக்குநர் பாலுமகேந்திரா அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினமான மே 19-ம் தேதி, பாலுமகேந்திரா பெயரில் விருது ஒன்றை வழங்க தமிழ் ஸ்டுடியோ ஏற்பாடு செய்திருக்கிறது.

சென்ற ஆண்டு எளிமையாக நடந்த இந்த விருது விழா இந்த ஆண்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடக்கவிருக்கிறது.

இந்த பாலுமகேந்திரா விருது இந்தியா முழுக்க தயாரிக்கப்பட்டுள்ள குறும் படங்களுக்கு மட்டுமே வழங்கப்படவிருக்கிறது. மொழி கடந்து அகில இந்திய விருதாக இந்த விருது வழங்கப்படுகிறது.

பரிசுத் தொகை :

முதல் பரிசு : 10,000 ரூபாய் & சான்றிதழ், பாலுமகேந்திரா கேடயம்.

இரண்டாவது பரிசு : BOFTA கல்வி நிறுவனத்தில் குறுகிய காலப் பயிற்சியில் பங்கேற்பதற்கான அனுமதி. (ஒரு லட்சம் பெறுமானமுள்ளது குறுகியக் காலப் பயிற்சி) & சான்றிதழ், பாலுமகேந்திரா கேடயம்.

விதிமுறைகள் :

* பாலுமகேந்திரா விருதுக்கு குறும் படங்களை அனுப்ப நுழைவுக் கட்டணம் எதுவுமில்லை.

* போட்டிக்கு வரும் குறும் படங்கள் 01.01.2010-க்குப் பிறகு எடுக்கப்பட்டனவாக இருத்தல் வேண்டும்.

* குறும் படங்கள் (Short Films) எந்தக் கருப்பொருளிலும் எடுக்கப்பட்டிருக்கலாம். 

* குறும் படங்கள் 30 நிமிடங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

* குறும் படங்கள் டி.வி.டி அல்லது வி.சி.டி.யில் தரமாகப் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.

* இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரம், இணைத்து அனுப்பப்படுதல் வேண்டும்.

* குறும் படத்தின் கதைச் சுருக்கம் (Synopsis), முக்கியக் காட்சிகளின் ஒளிப் படங்கள் (Still Photos) மற்றும் இயக்குநரின் ஒளிப் படம் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.

* முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்படும் குறும் படங்கள், திரைப்படக் கலைஞர்கள் முன்னிலையில் சென்னையில் திரையிடப்பட்டு அவைகளில் இருந்து விருதுக்குரிய குறும் படங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.

* விருது தொடர்பாக நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது. போட்டி தொடர்பாகக் கடிதப் போக்குவரத்துகள் அனுமதிக்கப்படமாட்டாது.

* ஆவணப் படங்கள் (Documentary Films) ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

* தேர்வு செய்யப்படாத குறும் படங்களைத் திருப்பி அனுப்புதல் இயலாது.

* பரிசுகள் பாலுமகேந்திராவின் பிறந்த தினமான மே 19-ம் தேதி, (மே 19 வேலை நாளாக இருந்தால், அதற்கடுத்து வரும் வார இறுதி நாளில் வழங்கப்படும்)

* விருதுக்கு குறும் படங்களை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி : மே 05, 2015

குறும் படங்களை அனுப்ப வேண்டிய முகவரி :

விதை

1, ஸ்ருதி அபார்ட்மென்ட்ஸ்,

காந்தி நகர் முதல் குறுக்குத் தெரு,

அடையார்,

சென்னை 600 020.

Our Score