full screen background image

2016-ம் ஆண்டுக்கான ‘பால கைலாசம் நினைவு விருது’ பெறும் சாதனையாளர்கள் அறிவிப்பு..!

2016-ம் ஆண்டுக்கான ‘பால கைலாசம் நினைவு விருது’ பெறும் சாதனையாளர்கள் அறிவிப்பு..!

‘சினிமா ராண்டவூ’  என்பது லாப நோக்கமற்ற ஒரு அறக்கட்டளை. நடிகையும், தொழில் முனைவோருமான ஷைலஜா செட்லூர் இதனை உருவாக்கிய நிர்வாக அறங்காவலர் ஆவார். திரைப்பட இயக்குனர் நாகா, அருண்மணி பழனி ஆகியோர் மற்ற அறங்காவலர்கள் ஆவார்கள்.

சவேரா ஓட்டலின் இணை நிர்வாக இயக்குநரான நீனா ரெட்டி, இதன் ஆதரவாளர் ஆவார். அறக்கட்டளையின் செயல்பாடுகளை நல்கி, வழங்கி ஆதரிக்கும் பிற ஆதர்வாளர்கள் அறக்கட்டளைச் செயல்பாடுகளை நடத்துகிறார்கள்.

படைப்பு சக்திமிக்க கலைகளின் மூலமாக சமூக உரையாடல்களை நிகழ்த்தும் களங்களை ஊக்கப்படுத்துவதே ‘சினிமா ராண்டவூ’வின் குறிக்கோளாகும். கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் சினிமா விமர்சனம் அது குறித்த பிற செயல்பாடுகளை உருவாக்குவது இதன்  திட்டமிடல்களின் பகுதியாகும்.

மனிதநேயமிக்க கல்வி மற்றும் விழிப்புணர்ச்சி சினிமாத் துறையின் சில ஒழுங்கு செய்யப்படாத பகுதிகளில் சமூக முயற்சிகளை இவ்வறக்கட்டளை உருவாக்குகிறது.

cinema rendevous notice-1

2012-ம் ஆண்டு அக்டோபரில் சவேரா ஓட்டலில் மாதம் ஒரு முறை கூடும் சினிமா சங்கமாக இந்த ‘சினிமா ராண்டவூ’ அமைப்பு துவங்கியது. அது முதல் மாதம்தோறும் ஒரு சினிமாவை திரையிட்டு ஒரு சிறப்பு விருந்தினரோடு சம்பிரதாயமற்ற ஊரையாடல்களை நிகழ்த்தி வருகிறது.

cinema rendezvous

சினிமா ஒரு கேளிக்கையாக மட்டுமில்லாமல் அதுவொரு போதுமான அர்த்தமுள்ள சமூகச் செயல்பாடாக சினிமாவின் மீதான காதலைக் கொண்டாடுவதுதான் இதன் நோக்கம். சினிமாவைப் பார்த்து அதனை விமர்சனம் செய்யும் பல்வேறு குழுக்கள் எங்களிடம் உண்டு. தமிழ், இந்திய, உலகப் படங்களில் தங்களுக்கு விருப்பமானவற்றைத் தேர்ந்தெடுத்து அதனைப் பற்றிப் பேச சினிமா அறிஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறோம்.

மீடியா மற்றும் படைப்பு சக்தி மிக்க துறைகளிலிருந்து பல்வேறு ஆளுமைகள் மாதாந்திர கூட்டங்களில் பங்கு கொண்டு சினிமா பற்றிய தங்கள சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். பல்வேறு கோணங்களில் சினிமா கலையை ஒவ்வொரு திரையிடலிலும் ஆராய்வது இதன் சிறப்பம்சமாகும்.

சினிமா கலை, தொழில் நுட்பம் பற்றிய ஒர்க்‌ஷாப்புகளை நடத்துவது மட்டுமின்றி சினிமா நிபுணர்கள் தொடர்ந்து தடையில்லாமல் நடந்த இந்த கூட்டங்களைல் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

bkma-4

2015-ல் ‘சினிமா ராண்டவூ’ அமைப்பு, ‘பால கைலாசம் நினைவு விருது’ ஒன்றை உருவாக்கி பெருமை கொண்டது. சமூகத்தின் முன்னேற்றத்துக்காக மீடியாவைப் பயண்படுத்தவேண்டும் என்று விரும்பிய, ஒரு தொலைக்காட்சி ஆளுமையும், செயல்பாட்டாளரும், ஆவணப்பட தயாரிப்பாளருமான பால கைலாசத்தின் சாரம், பார்வை ஆகியவற்றைக் கொண்டாடும்விதமாக இந்த விருது உண்டாக்கப்பட்டது.

பி.கே. என்று அன்போடு அழைக்கப்பட்ட பால கைலாசம் மனித வாழ்க்கையும், அதன் பொறுப்புணர்ச்சியும் என்பதில் ஆர்வப்பட்டவர். அவரைப் பின்பற்றியவர்களுக்கு அவரது அகால மரணம் பேரதிரதிர்ச்சியாக அமைந்தது. ஆனாலும் அவரது தணியாத ஆர்வம் நம்மை வழிநடத்துகிறது.

எனவே மீடியா சமூகத்தின் மீது கொண்டிருக்கும் தாக்கத்தின் மீது கவனம் குவிப்பதற்காக இந்த நினைவு விருது உண்டாக்கப்பட்டுள்ளது. அச்சு ஊடகம், உலகளாவிய வலைத்தளம், தொலைக்காட்சி, வானொலி, ஆவணப் படம் ஆகிய துறைகளில் இயங்கும் தனி நபர்கள் அல்லது நிறுவனங்கள் சமூக மற்றத்துக்காக இயங்குபவர்களைத் தேர்ந்தெடுத்து இவ்விருது வழங்கப்படுகிறது.

இவ்விருதைப் பெறுபவர்கள் சமூகத்தைத் தொட்டுப் பேசி இந்தியாவில் மாற்றங்களை உருவாக்கியவர்களாகவும், சமூகம், மாநிலம், நாடு தழுவிய சமூக முன்னேற்றத்துக்கான பார்வை மாற்றத்தை உருவாக்கிய அமைப்புகள் அல்லது சிறப்பான தனிமனிதர்களாகவும் இருத்தல் வேண்டுமென எங்களின் ‘சினிமா ராண்டவூ’ அமைப்பு விரும்புகிறது.

naga - shylaja chetlur

அந்த வகையில் இந்த 2016-ம் ஆண்டிற்கான பால கைலாசம் நினைவு விருதினைப் பெறும் ஆளுமைகளை அறிமுகப்படுத்தும் விழா நேற்று மாலை சென்னை சவேரா ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த விழாவில் ‘சினிமா ராண்டவூ’ அமைப்பின் நிறுவனர் ஷைலஜா ஷெட்லூர் மற்றும் அறங்காவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த வருடத்திற்கான பால கைலாசம் விருது பெறுபவர்கள் யார், யார் என்கிற தகவலை அறங்காவலர்களில் ஒருவரான இயக்குநர் நாகா தெரிவித்தார்.

அதன்படி…

NDTV Hindi Channel-ன் Executive Editor ரவிஸ்குமார் சிறந்த தொலைக்காட்சி வல்லுநராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆவணப் பட பிரிவில் தெலுங்குலகை சேர்ந்த ஆவணப் பட இயக்குநர் சந்திரசேகர் ரெட்டி விருதினைப் பெறுகிறார்.

இணையத்தளப் பிரிவில் scroll.in இணையத்தளத்தின் செய்தியாளரான எம்.ராஜசேகர் விருதினைப் பெறுகிறார்.

அச்சு ஊடகப் பிரிவில் பிரபல சர்வதேச பெண் பத்திரிகையாளரான Mandhakini Gahlot விருதினைப் பெறுகிறார்.

அச்சு ஊடகப் பிரிவில் தி ஹிந்து பத்திரிகையில் ஹெல்த் அண்ட் சயின்ஸ் பிரிவின் ஆசிரியரான வித்யா கிருஷ்ணன் விருதினைப் பெறுகிறார்.

பால கைலாசம் நினைவு விருது வழங்கும் விழா அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

 

Our Score