டிசம்பர் 15 முதல் 22-ம் தேதி வரை, 14-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா..!

டிசம்பர் 15 முதல் 22-ம் தேதி வரை, 14-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா..!

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில், தென்னிந்திய நடிகர் சங்கம், இயக்குநர்கள் சங்கம் மற்றும் அனைத்து சினிமா சங்கங்களின் ஆதரவுடனும் இன்டோ – சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் வழங்கும் 14-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, வரும்  டிசம்பர் 15 வியாழக்கிழமை முதல் 22 வெள்ளிக்கிழமைவரையிலும் நடைபெறவுள்ளது.

இந்த முறையும் உட்லண்ட்ஸ் திரையரங்க வளாகம், ஐநாக்ஸில் 2 திரைகள், கேஸினோ திரையரங்கம், ரஷ்ய கலாச்சார மையம், ஆர்.கே.வி.பிரிவியூ தியேட்டர் ஆகிய இடங்களில் படங்கள் திரையிடப்படவுள்ளன.

இந்த சர்வதேச திரைப்பட விழாவின் தமிழ் திரைப்படங்களுக்கான போட்டி பிரிவில் 12 தமிழ்த் திரைப்படங்கள் போட்டியிடுகின்றன.

இந்தியன் பனோரமா பிரிவில் 15 படங்கள் திரையிடப்படவுள்ளன.

ஏசியன் ஃபிலிம் அவார்ட்ஸ் அகாடமியின் ஃபிலிம் ரோட் ஷோவாக 8 படங்கள் திரையிடப்படுகின்றன.

6 பிரெஞ்ச் திரைப்படங்கள், 6 ஜெர்மன் திரைப்படங்கள்,  போலந்து இயக்குநர் மார்டின்ஸ் காரலஸியின் 6 திரைப்படங்களும் திரையிடப்படவுள்ளன.

மேலும் லக்ஸம்பர்க் நாட்டு திரைப்படங்கள் 6, பிரேசில் திரைப்படங்கள் 5, இரான் திரைப்படங்கள் 10, என்று மொத்தமாக உலக சினிமா வகையில் 97 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.

சென்ற ஆண்டில் சர்வதேச அளவில் பல விருதுகளையும், ஏகோபித்த விமர்சனங்களையும் பெற்ற படங்களும் திரையிடப்படவுள்ளன.

இந்தாண்டு விழாவில் கலந்து கொள்ளவுள்ள உலகளாவிய சிறந்த படங்கள் இவை :

ஹங்கேரி நாட்டின் ‘சன் ஆஃப் சவுல்’  – 2015-ல் சிறந்த அயல் மொழித் திரைப்படத்துக்கான ஆஸ்கர் பரிசினை வென்ற படம்.

இத்தாலி நாட்டின் ‘ஃபயர் அட்ஸீ’ – 2016 பெர்லின் திரைப்பட விழாவில் தங்கக் கரடி விருது பெற்ற படம்.

இங்கிலாந்து படமான ‘ஐ டேனியல் ப்ளேக்’ – 2016 கான்ஸ் திரைப்பட விழாவில் தங்கப் பனை விருது பெற்ற படம்.

செர்பியா நாட்டின் ‘டெத் இன் சரஜேவோ’ – 2016 பெர்லின் திரைப்பட விழாவில் வெள்ளிக் கரடி விருது பெற்ற படம்.

போலந்து நாட்டின் ‘யுனைடட் ஸ்டேட்ஸ் ஆஃப் லவ்’ – 2016 பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த ஸ்க்ரிப்டுக்கான வெள்ளிக் கரடி விருது பெற்ற படம்.

பிரான்ஸ் நாட்டின் ‘திங்ஸ் டு கம்’ – 2016 பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான வெள்ளிக் கரடி விருது பெற்ற படம்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் ‘எலல்லபிடு தி சாரோஃபுல் மிஸ்ட்ரி’  – 2016 பெர்லின் திரைப்பட விழாவில் ஆல்ஃபிரட் பேவர் வெள்ளிக் கரடி விருது பெற்ற படம்.

டுனிசியா நாட்டின் ‘ஹெடி’ – 2016 பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருது பெற்ற படம்.

ருமேனியா நாட்டின் ‘கிராஜுவேஷன்’ – க்ரிஸ்டியன் முன்கியு – கான்ஸ் விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதை பெற்றவர்.

பிரான்ஸ் நாட்டின் ‘பெர்சனல் ஷாப்பர்’ – ஆலிவர் அசாயஸ் – கான்ஸ் விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதை பெற்றவர்.

ஈரான் நாட்டின் ‘தி சேல்ஸ் மேன்’ – அஷ்கார் ஃபர்ஹாதி – சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த நடிகர் விருதுகளைப் பெற்றவர்.

பிலிப்பைன்ஸ் ‘நாட்டின் மா ரோஸா’  – கான்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகை விருதைப் பெற்றவர்.

பின்லாந்து நாட்டின் ‘தி ஹாப்பியஸ்ட் டே இன் தி லைஃப் ஆஃப் ஒல்லிமகி’ – கான்ஸ் விழாவில் அன்செர்டய்ன் ரிகார்ட்ஸ் பிரிவில் விருது பெற்ற படம்.

ஜப்பான் நாட்டின் ‘ஹார்மோனியம்’ – கான்ஸில் நடுவர் விருதைப் பெற்ற படம்.

பிரான்ஸ் நாட்டின் ‘தி ஸ்டாப் ஓவர்’ – சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெற்ற படம்.

ஜெர்மனியின் ‘டோனி எர்ட்மான்’ – கான்ஸில் விமர்சகர்கள் விருதைப் பெற்ற படம்.

ருமேனியா, கத்தார் நாட்டின் கூட்டு தயாரிப்பான ‘டாக்ஸ்’ – கான்ஸ் பட விழாவில் அன்செர்டய்ன் ரிகார்ட்ஸ் பிரிவில் விருது பெற்ற படம்.

மியான்மர் நாட்டின் ‘தி ரோட்டு மண்டலே’ – தங்க குதிரை விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட படம்.

போஸ்னியா நாட்டின் ‘அவர் எவ்ரிடே லைஃப்’ – போஸ்னியா நாட்டிலிருந்து ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள படம்.

இந்தியாவின் ‘விசாரணை’ – 89-வது ஆஸ்கர் விழாவுக்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ள படம்.

போலந்து நாட்டின் ‘ஆஃப்டர் இமேஜ்’ – போலந்து நாட்டின் புகழ் பெற்ற இயக்குநர் ஆண்டே வாட்ஜாவின் கடைசி படம். இந்தப் படம்தான் கோவா சர்வதேச திரைப்பட விழாவின் துவக்க நாளில் திரையிடப்பட்டது.  

மற்ற சிறப்பம்சங்கள் :

எம்.ஜி.ஆர். திரைப்பட கல்லூரி மாணவர்கள் எடுத்த படங்களின்அறிமுகம்.

மைய அரங்கான உட்லண்ட்ஸ் திரையரங்கில் தினந்தோறும் முக்கிய தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுடன் பார்வையாளர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறும்.

பதிவுக் கட்டணம் – ரூ.500 (மாணவர்கள்,  திரைத் துறையினர் மற்றும் மூத்த குடிமக்களுக்கு)

மற்றவர்களுக்கு – ரூ. 800

இணையதள பதிவுக்கு நவம்பர் 28-ம்தேதி முதல் www.ticketnew.com என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யலாம்.

உட்லண்ட்ஸ் திரையரங்க வளாகத்தில் டிசம்பர் 1-ம் தேதி முதல் நேரடி பதிவும் செய்து கொள்ளலாம். நேரம் காலை 11 மணி முதல் மாலை 6 மணிவரை.

Our Score