ஏ.ஆர்.ரஹ்மானின் குடும்பத்தில் இருந்து இன்னுமொரு இசையமைப்பாளர் அறிமுகம்..!

ஏ.ஆர்.ரஹ்மானின் குடும்பத்தில் இருந்து இன்னுமொரு இசையமைப்பாளர் அறிமுகம்..!

ஆஸ்கார் நாயகன் இசையமைப்பாளர்  AR ரஹ்மான் குடும்பத்திலிருந்து மீண்டும் ஒரு இசைக் கலைஞர் இசையுலகத்தில் அறிமுகமாகியிருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை மகனான E.R. அசார் காஷிஃப் ‘கண்ணாலே’ என்ற மியுசிக் வீடியோ மூலம் இசையுலகில் தனது பயணத்தை தொடங்குகிறார்.

இளமை பொங்கும் இந்த காதல் பாடலுக்கு காஷிஃப் இசையமைக்க பிரபல பாடகர் ஜாவேத் அலி மற்றும் பாடகர் ஸ்ரீநிவாஸின் மகள் சரண்யா ஸ்ரீநிவாஸ் பாடியுள்ளார். இந்த மியுசிக் வீடியோவை அஷ்வின் இயக்கியுள்ளார். விஜய் கார்த்தி கண்ணன் ஒளிப்பதிவில், ஸ்ரீதரன் படத் தொகுப்பை செய்துள்ளார்.

நாளை பிப்ரவரி 14-ம் தேதி சென்னை டிரேட் சென்டரில் நடைபெறவுள்ள ‘ பிக் தமிழ் மெலோடி அவார்ட்ஸ்’ விருது வழங்கும் விழாவில் இந்த மியுசிக் வீடியோவை வெளியிடவுள்ளனர்.

இது பற்றி கூறிய அஸார் காசிப், “சிறு வயது முதலே இசை மீது எனக்கு ஆர்வம் அதிகம். ரஹ்மான் அங்கிள் ஸ்டுடியோவிற்கு சென்று அவர் வேலை செய்வதை உன்னிப்பாய் கவனிப்பதுண்டு. இந்த மியுசிக் வீடியோ எனது நெடுநாள் கனவு. இதற்காக ரஹ்மான் மாமா மற்றும் எனது சகோதரன் G.V.பிரகாஷ்குமார் இருவரும் என்னை வாழ்த்தினர். உங்கள் அனைவருக்கும் எனது முதல் பாடல் பிடிக்கும் என்று நம்புகிறேன்..” என்கிறார். 

Our Score