நடிகர் பார்த்திபனின் படத்திற்கு ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

நடிகர் பார்த்திபனின் படத்திற்கு ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

நடிகர் பார்த்திபன் ‘சிங்கிள் ஷாட்’ முறையில் அடுத்து ஒரு படத்தை தயாரித்து, இயக்கப் போகிறார். இந்தப் படத்திற்கு ‘இரவின் நிழல்’ என்று பெயர் வைத்திருக்கிறார் பார்த்திபன்.

இந்தப் படத்திற்காக மிகப் பிரம்மாண்டமான செட்டுகளை அமைத்திருக்கிறார்கள். படத்தில் நடிக்கவிருக்கும் 30-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் 25 நாட்களாக ஒத்திகை பார்க்கவிருக்கிறார்கள். அதற்குப் பின்புதான் இந்தப் படம் ஒரே நாளில் படமாக்கப்படவுள்ளது.

இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைப்பார் என்று படத்தின் துவக்கத்திலேயே நடிகர் பார்த்திபன் சொல்லி வந்தார்.

இப்போது அது போலவே ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைக்க ஒத்துக் கொண்டாராம். ஏற்கெனவே ரஹ்மான் மூன்று பாடல்களை கொடுத்துவிட்டாராம். படத்தின் பிரமோஷன் பாடலை மிக விரைவில் ரஹ்மான் கொடுக்கவிருக்கிறார் என்றும் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

நடிகர் பார்த்திபன் இயக்கிய படங்களுக்கு இதுவரையிலும் ரஹ்மான் இசையமைத்ததே இல்லை. இதுதான் அவர்கள் இணையும் முதல் படம்.

கடந்த 2001-ம் ஆண்டில் ‘ஏலேலோ’ என்ற படம் ரஹ்மானின் இசையில் பார்த்திபனின் இயக்கத்தில் உருவானது. ஆனால் அந்தப் படம் இடையிலேயே கைவிடப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.

Our Score