full screen background image

கவிஞர் வைரமுத்து 5 பாடல்கள் எழுதியிருக்கும் ‘அவளுக்கென்ன அழகிய முகம்’ திரைப்படம்..!

கவிஞர் வைரமுத்து 5 பாடல்கள் எழுதியிருக்கும் ‘அவளுக்கென்ன அழகிய முகம்’ திரைப்படம்..!
தலைமுறை கடந்து தடம் பதித்து நிற்கும் கவிப்பேரரசு வைரமுத்து இன்றும் வீரியமுள்ள பாடல்களை எழுதி வருகிறார். தன் பாடல்களை என்றும் சோடை போக விடுவதில்லை..!

சிவாஜிக்கும் பாடல்கள் எழுதினார், பின்பு பிரபுவுக்கும் எழுதி, இன்று விக்ரம் பிரபுவுக்கும் எழுதிவருகிறார். ஸ்ரீதர், கே.பாலசந்தர், பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சேரனுக்கும் எழுதியவர், இன்று அறிமுகமாகும் புதிய இயக்குநருக்கும் எழுதி வருகிறார். 

அப்படித்தான் அறிமுக இயக்குநர் ஏ.கேசவன் இயக்கியுள்ள ‘அவளுக்கென்ன அழகிய முகம்’ என்கிற படத்துக்கும் எழுதியுள்ளார்.
IMG_9574

எம்.எஸ். கதிரவன் என்கிற 22 வயது பொறியியல் கல்லூரி மாணவர் இப்படத்தினை தயாரித்துள்ளார்..

காதலில் வெவ்வேறு காரணங்களால் தோல்வி அடைந்த மூன்று பேர் தங்களுடன் வந்து சேர்ந்த நான்காவது நண்பனின் காதலை எப்படி வெற்றி பெற வைக்கிறார்கள் என்பதுதான் கதை.இது காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான படம்.     

இப்படத்தில் 5 பாடல்களையும் வெவ்வேறு தளத்தில் வெவ்வேறு நிறத்தில் வெவ்வேறு குணச்சித்திரத்தில் எழுதி கலக்கியுள்ளார் வைரமுத்து

இதோ அந்தப் பாடல்கள் பற்றிய விவரம் :

பாடல்-1

காதலில் தோற்றவர்கள் பாடும் பாடல் இது. 
‘ஒரு பெண்ணைக் காதலித்தோம் ஒரு தலையாய் காதலித்தோம் 
காதலிலே தோற்றவரெல்லாம் ஒன்றாய்க் கூடிவிட்டோம்’
என்று தொடங்கும் பாடல்.

பாடியுள்ளவர்கள் ஆலப்ராஜ், சூரஜ் சந்தோஷ்.

பாடல்-2

IMG_4387

நாயகன் கோவைக்கார பாவையான தன் காதலியை எண்ணிப் பாடும் பாடல் இது. கோவையையும் ஒரு பாவையையும் ஒப்புமைப்படுத்தி எழுதியுள்ள பாடல் இது.

‘ஐஸ்வர்யா தங்கையோ ஆல் இன் ஆல் மங்கையோ 
ஆரெஸ்புரம் வீதியில் வந்தாடுதோ’ 

என்ற பாடல். இதனை வேல் முருகன் பாடியுள்ளார்.

பாடல்-3

இது ஒரு  காதல் பாடல்

‘அக்டோபர் ஏழு ஆனந்த தேதி
ஐலவ்யூ சொன்னான் கூந்தலைக் கோதி’ 

இந்தப் பாடலை ராகுல் நம்பியார், சின்மயி பாடியுள்ளனர்.

பாடல்-4

காதலையும் அம்மா பாசத்தையும் கலந்து எழுதப்பட்டுள்ள பாடல்.
யாதுமாகி நிற்கும் காதலி ‘தாயுமானவள்’ ஆகி ஆறுதலாகப் பாடும் பாடல் இது.

‘என்னடா கண்ணா ஏனிந்த கண்ணீர்? 

நானுந்தன் தாயல்லவா? ‘

இந்தப் பாடலை சந்திரலேகா  அரவிந்த் ஸ்ரீநிவாஸ் பாடியுள்ளனர். இப்பாடலைப் பாட புதுக்குரல் தேடியபோது கிடைத்தவர்தான் இந்த சந்திரலேகா.

இவர் இப்போது உலகம் முழுக்க பிரபலமாகியுள்ள மலையாளக்குயில். வீட்டுக்குள் ஆர்வத்தில் சமையலறையில் பாடிக் கொண்டிருந்தவரின் ஒரு பாடலைப் பதிவு செய்து யூடியூப்பில் ஒலிபரப்ப, அவர் பிரபலமாகி இப்போது உலகம் சுற்றுகிறார். வி.ஐ.பி.க்கள் முதல் முதல்வர்வரை இவர் வீட்டுக்கு விசிட் அடித்து விட்டார்கள். அந்த அளவுக்கு பிரபலமாகிவிட்டார். 

பாடல்-5

IMG_4839
‘டோலு டோலு அஞ்சுபேரு நாங்க ஒரு பஞ்ச பூதந்தானுங்க
எங்க நெஞ்சில் வஞ்சமில்லை அஞ்சுபேரு நாங்க’

இது ஐந்து நண்பர்களும் பாடும் பாடல். ரஞ்சித் குழுவினர் பாடியுள்ளனர். இதில் பல பழமொழிகளைப் பயன்படுத்தி பாடலை எழுதியுள்ளார் வைரமுத்து. சூழலுக்கு சூழல்.. பழமொழிக்குப் பழமொழி.. என புதுவித அனுபவம்.

இப்படத்தில் நடிப்பவர்கள் பலரும் புதியவர்களே.! பூவரசன், விஜய் கார்த்திக், விக்கி ஆதித்யா, சபரி என நான்கு பேர் நாயகர்களாக  அறிமுகமாகிறார்கள். பிரதான நாயகியாக டெல்லி விளம்பர மாடல் அனுபமா பிரகாஷ் அறிமுகமாக ரூபாஸ்ரீ. சத்யா, நிவிஷா என மேலும் மூன்று புதுமுகங்களும் நடித்திருக்கிறார்கள். பவர் ஸ்டார் சீனிவாசனும் நடித்திருக்கிறார்.

கதைக் களம் கோவை என்றாலும் மதுரைக்குக் கதை பயணிக்கிறது. கோவை, மதுரை தவிர கொடைக்கானல், சென்னை, பாண்டிச்சேரி, கேரளா ஆலப்புழா போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

ஒளிப்பதிவு – நவநீதன். இசை – டேவிட் ஷார்ன். இவர் மலையாளம், இந்தியில் ஆல்பங்களுக்கு இசையமைத்தவர். படத்தொகுப்பு – கோபிகிருஷ்ணா, நடனம் – ஷங்கர், ஸ்டண்ட் – எஸ்.ஆர்.முகேஷ், கலை இயக்கம் – எட்வர்ட் கென்னடி. தயாரிப்பு மேற்பார்வை – அன்பு செல்வன்,

கதிரவன் ஸ்டுடியோஸ் சார்பில்  எம்.எஸ். கதிரவன்  தயாரிக்கும் ‘அவளுக்கென்ன அழகிய முகம்’ இறுதிக் கட்டப் பணிகளில் மும்முரமாக உருவாகி வருகிறது.
Our Score