full screen background image

‘அதோ அந்தப் பறவை போல’ படத்தை V Square Entertainment  நிறுவனம் வெளியிடுகிறது..!

‘அதோ அந்தப் பறவை போல’ படத்தை V Square Entertainment  நிறுவனம் வெளியிடுகிறது..!

செஞ்சுரி இண்ட்டெர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில்  தயாரிப்பாளர் ஜோன்ஸ் தயாரித்துள் திரைப்படம் அதோ அந்தப் பறவை போல’..!

அட்வெஞ்சர் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் நடிகை அமலா பால், கதையின் நாயகியாக  நடித்துள்ளார்.

நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி வனத்துறை அதிகாரியாக முக்கிய  கதாபாத்திரத்தில்  நடித்திருக்கிறார். மேலும்  ஐ.பி.எல்.  வர்ணனையாளரும்  ஜனத்’,  ‘ஹவுஸ்ஃபுல்-3’,  ‘டேஞ்சரஸ் ஐசக்’  உள்ளிட்ட  பாலிவுட்  படங்களில் நடித்தவருமான  சமீர்  கோச்சார்  மற்றொரு  முக்கிய  கதாபாத்திரத்தில்  நடித்திருக்கிறார்.  பிரவீன்  என்ற  குழந்தை  நட்சத்திரம்  இந்தப்  படத்தின்  மூலம்  தமிழ் சினிமாவில்  அறிமுகமாகிறார்.

ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கும் இந்த படத்திற்கு சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஜான் ஆப்ரகாம் படத் தொகுப்பையும்,  சரவணன்  கலை  இயக்கத்தையும்  கவனித்துள்ளனர். சுப்ரீம் சுந்தர் சண்டைக் காட்சிகளை  உருவாக்கியிருக்கிறார். அருண் ராஜகோபாலன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். அறிமுக  இயக்குநரான கே.ஆர்.வினோத் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

இவர்  ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ என்கிற படத்தில்  இணை  இயக்குநராகப் பணியாற்றியவர்.  மேலும், சில  தொலைக்காட்சி  விளம்பரங்களையும்  இயக்கியிருக்கிறார். 

கேரளா, கர்நாடக எல்லையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி  மலைப் பகுதியின்  அடர்ந்த  காட்டுக்குள்  நடக்கிற  அட்வென்ஞ்சர்  த்ரில்லர்  கதையம்சம்  கொண்ட  படமாக இந்த ‘அதோ அந்த பறவை போல’ படம் உருவாகியிருக்கிறது.

இளம் தொழிலதிபரான அமலாபால் அடர்ந்த காட்டுக்குள் சென்று, வெளியே வர முடியாமல் தவிக்கிறார். காட்டுக்குள் சிக்கித்  தவிக்கும்  அமலாபால்,  என்னென்ன  இன்னல்களை  அனுபவிக்கிறார்,,? வனப் பகுதிக்குள்  இருக்கும்  மிருகங்கள்,  காட்டுவாசிகளிடமிருந்து  எப்படி  தப்பிக்கிறார்  என்பதை  மையப்படுத்திய  த்ரில்லர்  கதையாக  இந்தப் படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.

தற்போது இத்திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் நிலையில், திரு. விஸ்வநாதன் மற்றும் திரு. சுனில் குமாரின்  கூட்டணியில் உருவாகியிருக்கும் புதிய திரைப்பட வெளியீட்டு நிறுவனமான V Square Entertainment தனது முதல் வெளியீடாக இந்தப் படத்தை வெளியிடவுள்ளது.

V Square Entertainment நிறுவனத்தின் தலைவரான ஸ்ரீவிஸ்வநாதன் இது குறித்து பேசும்போது, திரையுலகில் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குவது என்பது எனது நீண்ட நாள் கனவு, அது நனவாகியுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எங்களின் V Square Entertainment நிறுவனத்தில் இந்தப் புதிய தொழிலை வெற்றிகரமாக்கும் சரியான குழுவை நாங்கள் அமைத்துள்ளோம். தொழில் துறையில் உள்ள வல்லுநர்களின் உதவியுடன் இது நடந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இனி வரும் காலங்களில் சிறந்த மற்றும் தனித்துவமான உள்ளடக்கம் கொண்ட திரைப்படங்களை நாங்கள் விநியோகிப்போம். மேலும் பார்வையாளர்கள் கொண்டாடுவதற்கும், பாராட்டுவதற்கும் உரிய வகையில் செயல்படுவோம்.

திரைப்பட விநியோகத் துறையில் வெளிப்படைத்தன்மையே முக்கிய அம்சம் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். மேலும், எங்களது வெற்றிகரமான பயணத்திற்கு இந்த மந்திரத்தை நாங்கள் உயிராகப்  பின்பற்றுவோம்.

எங்களின் முதல் திரைப்படமான நடிகை அமலா பால் நடித்த அதோ அந்த பறவை போல’, பார்வையாளர்களாக எங்களை மிகவும் கவர்ந்துள்ளது. இந்தப் படத்தின் அழகிய சிறு தொகுப்பு காட்சிகளால் நாங்கள் கவரப்பட்டோம், இது பான்-இந்திய மக்களை ஈர்க்கும் திறன் கொண்டது என்று நாங்கள் நம்புகிறோம். குறிப்பாக, இப்படத்தில் நடிகை அமலா பாலின் அர்ப்பணிப்புத் தன்மையுடன் கூடிய நடிப்பு எங்களை பிரமிக்க வைக்கிறது.

படத்தின் திரையரங்கு வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

V Square Entertainment மேலும் சில சுவாரசியமான திரைப்படங்களை வெளியிட இருக்கிறது. அவை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வரிசையாக வெளியாகும்…” என்றார்.

Our Score