full screen background image

ரியோ ராஜ், ரம்யா பாண்டியன் நடித்திருக்கும் ‘தோட்டா’ ஆல்பம் பாடல்..!

ரியோ ராஜ், ரம்யா பாண்டியன் நடித்திருக்கும் ‘தோட்டா’ ஆல்பம் பாடல்..!

இளம் திறமையாளர்களின் திறமைகளை பொது வெளியில் பிரபலப்படுத்தும் வகையிலும், சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும்,  Noise and Grains நிறுவனம் புதிய இளம் திறமையாளர்களின் உருவாக்கத்தில் ஆல்பம் பாடல்களை உருவாக்கி வருகிறது.

அந்த வரிசையில் இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் ரியோ ராஜ் நடிப்பில் கண்ணம்மா என்னம்மா’ என்ற ஆல்பம் பாடல் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது தோட்டா’ என்ற இசை ஆல்பத்தையும் இதே நிறுவனம் தயாரித்துள்ளது. 

இந்தப் பாடல் ஆல்பத்தில்  ரியோ ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் நடிக்க, தேவ் பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். பிரேம்ஜி, நித்ய்ரீ இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடல் ஆல்பத்தை ஜெ.பி.பிரிட்டோ இயக்கியுள்ளார்.

இயக்கம் – பிரிட்டோ J.B., இசை – தேவ் பிரகாஷ், பாடல்கள் –  A.S.தாவூத், பாடியவர்கள் –  பிரேம் ஜி, நித்ய்ரீ, நடன  இயக்கம் –  அபு & சால்ஸ், ஒளிப்பதிவு – மாதேஷ் மாணிக்கம், படத் தொகுப்பு – கிருஷ்ணா குமார், கிரியேட்டிவ் டைரக்டர்  – கார்த்திக் ்ரீனிவாஷ், பிஸினஸ் டைரக்டர் – மஹாவீர் அசோக், மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.

நேற்று இப்பாடல் ஆல்பத்தின் வெளியீட்டு விழா,  சின்னத்திரை பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் லீலா பேலஸ் ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில் படக் குழுவினருடன் பிக்பாஸ்’ புகழ் ராஜு, அபிராமி, ஜூலி, சக்ரவர்த்தி, கேப்ரியல்லா,  உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினர். 

இந்த விழாவில் நடிகரும், பிக்பாஸ்-5’ வெற்றியாளருமான ராஜு பேசும்போது, “நானும் ரியோவும் வாய்ப்பு தேடிய காலத்திலிருந்தே மிகவும் நெருங்கிய நண்பர்கள். அவர் எப்போதும் வேலையில் சின்ஸியராக இருப்பார். அவர் ரொம்பவும் திறமைசாலி. இந்த பாடலில் நடனம் அற்புதமாக இருந்தது. ரம்யாவின் ரசிகன் நான். அவருக்காகவே பல முறை இந்த ஆல்பத்தை பார்த்து ரசித்தேன். திரைப்பட பாடல் வெளியீட்டு விழாதான் இவ்வளவு பெரிதாக நடக்கும். ஆனால், இங்கே இந்த இசை ஆல்பம் வெளியீட்டிற்கு அதே அளவுக்கு பிரம்மாண்டமாக இந்த விழா நடப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ரியோவுக்கும் குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்..” என்றார்.

நடிகர் ரியோ ராஜ் பேசும்போது, “எங்களது முந்தைய ஆல்பமான ‘கண்ணம்மா’ பாடல்  ஒரு மொட்டை மாடியில் எதேச்சையாக உருவானது. அது மிகப் பெரிய ஹிட்டானது. இந்த பாடல் பற்றி Noise & Grains அவர்களிடம் தெரிவித்தவுடன் ஓகே சொல்லிவிட்டார்கள். அவர்களுக்குத்தான் பெரிய நன்றியை சொல்ல வேண்டும்.

மாதேஷ் மாணிக்கம் பெரிய பெரிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்பவர். எங்கள் டீமில் அவர் மட்டும்தான் பெரிய ஆள், அவர் இந்த பாடலை செய்து தந்ததற்கு அவருக்கு நன்றி. பிரிட்டோ மிக அற்புதமாக இயக்கியுள்ளார். அவர் இன்னும் பெரிதாக வளர்வார்.

பிக்பாஸில் சண்டை போட்டுக் கொண்டாலும் நானும் ரம்யாவும் இப்போதுவரையிலும் நல்ல நண்பர்கள்தான். அவர் இதில் நடித்ததில் எனக்கு மகிழச்சி. எங்களை பாராட்ட வந்த அனைவருக்கும் நன்றி…” என்றார்.

நடிகை ரம்யா பாண்டியன் பேசும்போது, “நான் இதுவரை எந்த ஆல்பம் பாடலும் செய்ததில்லை. பிரிட்டோ சொன்ன ஐடியா பிடித்திருந்தது. உடனேயே ஒப்புக் கொண்டேன்.

இந்த டீம் ஜாலியான டீம். இப்பாடலில் வேலை பார்த்த அனுபவம் மிக சந்தோசமாக இருந்தது. இந்த பாடல் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். ரீல்-ஸில் எங்கள் நடனத்தை ஆடி இப்பாடலை ஹிட் செய்யுங்கள். அனைவருக்கும் நன்றி..” என்றார்.

இயக்குநர் பிரிட்டோ பேசும்போது, “எங்களது முதல் தயாரிப்பான கண்ணம்மா’ பாடல் ஹிட்டான பிறகு இந்த பாடல் செய்யலாம் என முடிவெடுத்தபோது முதலில் ரியோதான் செய்ய வேண்டும் என நினைத்தேன்.

அவரிடம் ரம்யா இந்த பாடலை செய்தால் நன்றாக இருக்குமென்று சொன்னேன். அவர் ஒப்புக் கொள்வார் என்றால் ஓகே என்றார். ரம்யாவும் ஒப்புக் கொண்டு பணியாற்றி தந்தார். என்னை நம்பி கடுமையாக உழைத்த என் குழுவினருக்கு நன்றி. இந்த பாடலை அட்டகாசமாக பாடி தந்த பிரேம்ஜி மற்றும் நித்ய்ரீ இருவருக்கும் நன்றி. இந்தப் பாடலையும் பெரிய அளவில் வெளியிடும் Noise & Grains அவர்களுக்கு நன்றி…” என்றார்.

Our Score