full screen background image

அடுத்தடுத்து 3 படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்..!

அடுத்தடுத்து 3 படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்..!

‘அதிபர்’ படத்தை தயாரித்த T.சிவகுமார் தனது பென் கண்ஸ்டோரிடியம் ஸ்டூடியோஸ் (பி) லிமிடெட் நிறுவனம் சார்பில் அடுத்து தயாரிக்கும் படத்தை இயக்குநர் செல்வா இயக்கவுள்ளார்.

இயக்குநர் செல்வா இயக்கும் 26-வது படம் இது. இந்த படத்தில் மூன்று முன்னணி நாயகர்கள் நடிக்க இருகிறர்கள், நாயகிகள் மற்ற தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இலங்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை தழுவிய இந்தப் படத்தின் கதையை தயாரிப்பாளர் T.சிவகுமாரே எழுதி இருக்கிறார். ‘அதிபர்’ படத்தின் கதையும் இவரின் வாழ்கையில் நடந்த உண்மை சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. தவிர வரும் டிசம்பரில் இரண்டாவது படத்தையும்,  அடுத்தாண்டு ஜூன் மாதத்தில் மிகப் பெரிய பட்ஜெட்டில் மூன்றாவது படத்தையும் தயாரிக்க இருக்கிறார். 

Our Score