83 வயது நடிகர் நம்பிராஜன் நாயகனாக நடிக்கும் ‘அஸ்திவாரம்’ படம்

83 வயது நடிகர் நம்பிராஜன் நாயகனாக நடிக்கும் ‘அஸ்திவாரம்’ படம்

என் ராசாவின் மனசிலே’, ‘அரண்மனை கிளி’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஆகிய வெற்றிப் படங்கள் உட்பட நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ள 83 வயது நடிகரான பி.வி.நம்பிராஜன்  கதையின் நாயகனாக நடிக்க அஸ்திவாரம்’ என்ற படம் தற்போது தயாராகி வருகிறது.

ஜி.ஜி.ஆர். மூவி எண்டர்பிரைசஸ் சார்பில் தயாரிப்பாளர் ஏ.இசட்.ரிஜ்வான் தயாரிக்கும் இந்தப் படத்தில் இளம் நாயகன் ஒருவரும் அறிமுகமாகிறார். முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இதில் நடிக்க இருக்கிறார்கள்.

இயக்குநர் பாரதி கணேஷிடம் பல படங்களில் இணை இயக்குநராக பணிபுரிந்து அனுபவம் பெற்ற உடுமலை எஸ்.அஜ்மீர் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

படம் பற்றி இயக்குநர் பேசும்போது, ”வயது குறைந்த நடிகர்கள் மேக்கப் போட்டு  முதுமை தோற்றத்தில்  நடித்த படங்கள் பல உண்டு. எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி, விஜயகாந்த், வி.கே.ஆர், சத்யராஜ், பிரபு, சரத்குமார், என நிறைய நடிகர்கள் அப்படி நடித்த படங்கள் உள்ளன.

ஒரிஜினலாக 83 வயதுடைய பி.வி.நம்பிராஜன் நாயகனாக நடிப்பது தமிழ் சினிமாவில் நடக்கும் புதுமை.

இந்தப் படம் முற்றிலும் மாறுபட்டு, முழுவதும் வேறுபட்டு இருக்கும் என்று நான் கூற மாட்டேன். இதைவிட மேலான வார்த்தைகளை படம் பார்த்தபின் பார்த்தவர்கள் கூறுவார்கள் என்ற நம்பிக்கையோடு இந்த அஸ்திவாரம்’ படத்தின் கதையை அமைத்துள்ளேன்.

அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது. திண்டுக்கல், பித்தளைபட்டி, ஆத்தூர், சின்னாளபட்டி, பிள்ளையார்நத்தம் ஆகிய ஊர்களில் படம் படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளது. படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திரைக்கு வரும்” என்றார்.

Our Score