பெஸ்ட் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தன.சண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’.
கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் ஷாம் கதாநாயகனாக நடிக்க, மாடலிங் துறையை சேர்ந்த நிரஞ்சனி கதாநாயகியாக நடிக்கிறார்.
மேலும், முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர் மற்றும் அறிமுக நடிகர் ரஞ்சித் DSM உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
விரைவில் வெளியாக உள்ள ‘ரேஞ்சர்’, ‘ஜாக்சன் துரை’ ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கல்யாண் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, ‘இறுதிச்சுற்று’ மற்றும் ‘சூரரைப் போற்று’ படங்களில் துணை படத் தொகுப்பாளராக பணியாற்றிய பூபதி இந்த படத்தின் மூலம் படத் தொகுப்பாளராக அறிமுகம் ஆகிறார்.
‘ஐரா’, ‘எட்டு தோட்டாக்கள்’, ‘பொம்மை நாயகி’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த சுந்தரமூர்த்தி இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். கலை வடிவமைப்பை ராஜவேல் கவனிக்க, சண்டைப் பயிற்சியாளராக முகேஷ் பொறுப்பேற்றுள்ளார். பத்திரிக்கை தொடர்பு ; A.ஜான்.
இதன் கதையை கதாசிரியர் ஜெகன் எழுதியுள்ளார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்குகிறார். இவர் கடந்த பத்து வருடங்களாக பல குறும் படங்களை இயக்கி நடித்தவர், திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த அனுபவம் பெற்றவர்.
இந்த படம் விறுவிறுப்பான துப்பறியும் திரில்லர் படமாக உருவாகியுள்ளது.
படம் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இந்தப் படத்தை தமிழகமெங்கும் பைவ்-ஸ்டார் செந்தில் வெளியிடுகிறார்.
இவரது நிறுவனம் கடந்த சில மாதங்களில் தொடர்ந்து வெளியட்ட ‘பார்க்கிங்’, ‘மகாராஜா’, ‘கருடன்’ ஆகிய படங்கள் மிகப் பெரிய வெற்றியை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ‘அஸ்திரம்’ படத்தின் கதையும், படமாக உருவாகியிருக்கும் விதமும் பைவ் ஸ்டார் செந்தில் அவர்களை ரொம்பவே ஈர்த்து விட்டது. அதனால் தற்போது அஸ்திரம் படத்தை தங்கள் பைவ்-ஸ்டார் நிறுவனம் மூலமாக இவர் வெளியிட இருப்பதால் இந்த நிறுவனம் வெளியிட்ட முந்தைய படங்கள் போலவே இந்த ‘அஸ்திரமும்’ படமும் ரசிகர்களின் வரவேற்பை பெறும் என்று படக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
வரும் பிப்ரவரி-21-ம் தேதி, உலகமெங்கும் பைவ் ஸ்டார் நிறுவனம் பிரம்மாண்டமாக ‘அஸ்திரம்’ படத்தை வெளியிட உள்ளது.









