“வலிமை இந்தியில் டப் செய்யப்படுமா..?” – தயாரிப்பாளர் போனி கபூரின் பதில்

“வலிமை இந்தியில் டப் செய்யப்படுமா..?” – தயாரிப்பாளர் போனி கபூரின் பதில்

அஜீத்தின் ரசிகர்கள் சினிமாக்காரர்கள், பத்திரிகையாளர்கள்.. இவர்களையும் தாண்டி அரசியல்வாதிகளிடம்கூட கேட்டுத் தொலைத்துவிட்டார்கள் ‘வலிமை’ படத்தின் அப்டேட்டை..!

அரசியல் கட்சிகளின் கூட்டணி முடிவுகளைவிடவும் பரம ரகசியமாக இருக்கிறது ‘வலிமை’ படத்தின் விஷயங்கள். இது குறித்து அந்தப் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் சமீபத்தில் பேசுகையில், “தற்போது படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்துக்கிட்டிருக்கு. ரசிகர்கள் மகிழ்ச்சியடைக் கூடிய வகையிலான செய்திகள் இனிமேல் அடுத்ததுட்டு நிச்சயமாக வரும்.

இந்தப் படம் தமிழ்ச் சினிமாவில் ஒரு சரித்திர வெற்றியை பெறும் என்பதை மட்டும் நான் உறுதியா சொல்றேன். பைக் சேஸிங், சண்டை காட்சிகளில் ‘தல’ அஜீத் டூப் இல்லாமல் அவரே ரிஸ்க் எடுத்து நடிச்சிருக்கார். அவரது உழைப்புக்கு பலன் இல்லாமலா போகும்.. ?

இப்போது இந்தப் படத்தை இந்தியில் டப் செய்து வெளியிடலாமா என்பது பற்றியும் யோசித்து வருகிறோம்..” என்று சொல்லியிருக்கிறார்.

Our Score