சித்தார்த் நடிக்கும் ‘அருவம்’ பேய்ப் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

சித்தார்த் நடிக்கும் ‘அருவம்’ பேய்ப் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பாளர் ஆர்.ரவீந்திரனின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அருவம்’.

இந்தப் படத்தில் சித்தார்த் மற்றும் கேத்ரின் தெரசா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இவர்களுடன் கபிர் துகன் சிங், மதுசூதன ராவ், ‘ஸ்டண்ட்’ சில்வா மற்றும் ‘போஸ்டர்’ நந்தகுமார் ஆகியோர் வில்லன்களாக நடித்துள்ளனர். சதீஷ், ‘ஆடுகளம்’ நரேன், குமரவேல், மயில்சாமி இன்னும் பல முக்கிய நடிகர்களும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

எஸ்.எஸ். தமன் இசையமைக்க, பிரபல ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது வென்ற பிரவீன் K.L. படத் தொகுப்பு செய்ய, ஜி.துரைராஜ்  கலை இயக்குநராகப் பணிபுரிகிறார். ஸ்டண்ட் சில்வா வில்லனாக நடிப்பதோடு, படத்தின் சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

இயக்குநர் சாய் சேகர் இயக்கியிருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் புத்தாண்டு விருந்தாக வெளியாகியிருக்கிறது. 

இந்த ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு பற்றி படத்தின் இயக்குநர் சாய் சேகர் கூறும்போது, “எங்களுடைய இந்த ‘அருவம்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் முதல் ஈர்ப்பு, சிறந்த ஈர்ப்பு என்பது போல,  பார்வையாளர்களிடமிருந்து சிறந்த வரபேற்பை பெறும் என்பதில் நாங்கள் உறுதியாகவும் இருக்கிறோம்.

‘அருவம்’ என்ற தலைப்பு, இது திகில் படம் என்பதை உறுதி செய்கிறது. ‘அருவம்’ என்பது உருவம் என்பதின் எதிர் பதமாகும். ஒவ்வொருவரும் நம்ப மறுக்கும், ஆனால் நம்மை சுற்றி நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகள் நம்மை நம்ப  வைக்கும் ஒரு விஷயத்தை பற்றி நாங்கள் பேசுகிறோம்.

இந்தப் படத்தை இயக்கியது ஒரு மிகச் சிறந்த  உணர்வாகும். குறிப்பாக சித்தார்த் போன்ற இந்திய அளவிலான  ரசிகர்களை கொண்ட ஒரு நடிகர் இந்த படத்தில் இருப்பது எங்களுக்கான கூடுதல் பொறுப்புகளை சேர்த்திருக்கிறது. இந்தப் படத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் எங்களுக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் ரவிந்திரன் சாருக்கு நன்றி” என்றார்.

Our Score