‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிராஜன் எழுதி, இயக்கி வரும் படம் ‘அருவா சண்ட.’
இப்போது இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தரணின் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதி, அனுராதா பட் பாடிய ‘ஆற்றில் ஒரு மீனாக காட்டில் ஒரு மானாக…’ என்ற பாடலின் படப்பிடிப்பு சமீபத்தில் கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் படமாக்கப்பட்டது.
கதாநாயகியின் அறிமுகப் பாடலான இந்தப் பாடல் காட்சியில் கதாநாயகி மாளவிகா மேனன், கண்ணைக் கவரும் வண்ண உடைகளில் ஆடிப் பாடியுள்ளார்.
இந்தப் பாடலில் கொஞ்சம் கவர்ச்சியாக தெரிய வேண்டும் என்ற இயக்குநரின் விருப்பத்திற்கிணங்க கொட்டும் அருவியில் நனைந்தபடி நடனக் குழுவினருடன் செமத்தியாக ஆட்டம் போட்டிருக்கிறார் மாளவிகா.
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் சார்பில் ஏ.ராஜா தயாரித்து வரும் ‘அருவா சண்ட’ திரைக்கு வரத் தயாராகிக் கொண்டிருக்கிறது.