அனைத்து திறமைகள் இருந்தும் தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தில் இ்ல்லாமல் இருப்பவர் நடிகர் அருண் விஜய்.
இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘தல-55’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இவர் அவ்வபோது ‘தல-55’ படப்பிடிப்பில் அஜித்துடன் இருந்த அனுபவங்களை பற்றி தனது டிவீட்டர் பக்கத்தில் ட்வீட் செய்வார்.
அஜித் பற்றி லேட்டஸ்டாக செய்த அருண் விஜய் பதிவு செய்த ட்வீட்டில், “அஜித்தை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போதுதான் அதை அருகிலிருந்து உணர்ந்திருக்கிறேன்… அவர் உண்மையிலேயே சூப்பர் ஸ்டார்தான்! எனக்கு நிஜமான இன்ஸ்பிரேஷன் அவர்தான். எதையுமே அவர் பொய்யாக செய்வதில்லை. அவருடன் இருந்த ஒவ்வொரு தருணத்தையும் ரசிக்கிறேன்…” என குறிப்பிட்டிருக்கிறார்.
“Heard a lot.. but moving close, he is a real Super Star!! A true Inspiration.. He doesn’t fake anything.. loving every bit with him :)”
இப்போதுதான் சூப்பர் ஸ்டார் பட்டத்தின் அடுத்த வாரிசு யார் என்ற சர்ச்சை எழுந்து முடிந்துள்ளது.. விஜய்யும் தனது சூப்பர் ஸ்டார் பட்டமளிப்பு விழாவையும் தள்ளி வைத்துள்ளார். இந்த நேரத்தில் அஜீத்துக்கு முடிசூட்டும் விழாவை ஒரு நடிகரே ஆரம்பித்து வைத்திருக்கிறார்..தொடரப் போவது யாரோ..?