full screen background image

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்படுகிறது..!

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்படுகிறது..!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்படவிருக்கிறது என்று இரண்டு நாட்களுக்கு முன்பே தெரிவித்திருந்தார்கள்.

karthi-gift-2

அதன்படி இன்று நடிகர் சங்க காலியிடத்தில் சாமியானா பந்தல் போடப்பட்டு அதில் பூஜை நடத்தப்பட்டது. பின்பு காலை 9 மணிக்கு தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் தலைமையில் நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.

நடிகர் கார்த்தி இப்போதுவரையிலும் தொடர்ந்து அங்கேயே இருந்து பரிசுகளை வாங்க வரும் உறுப்பினர்களுக்கு வழங்கி வருகிறார்.

karthi-gift-1

சென்னையில் மட்டுமே சுமார் 2000 சங்க உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தீபாவளி தினம்வரையிலும தினமும் இதே இடத்தில் பரிசு தரப்படும் என்று தெரிவித்துள்ளார்கள். வெளியூர்களில் இருப்பவர்களுக்கு பரிசுப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாம்.

இதற்கு கிட்டத்தட்ட 25 லட்சம் ருபாய் செலவாகியிருக்கும் என்று தெரிகிறது. இந்தப் பரிசுப் பொருட்களில் வேட்டி, சட்டை, சேலை மற்றும் இனிப்பு பலகாரங்களும் அடக்கம்.

MCR Shopping நிறுவனம் 3000 வேஷ்டிகளை வழங்கியுள்ளது. சேகர் எம்போரியம் மற்றும் பிவிபி சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து 3000 சேலைகளை வழங்கியுள்ளனர். கோவையைச் சேர்ந்த Advanced Clothing Concepts நிறுவனம் சட்டை பிட்டு துணிகளை வழங்கியுள்ளது. இனிப்பு வகைகளை நடிகர் சங்கத்தின் முக்கிய பிரமுகர்களே தங்களுடைய சொந்த செலவில் வாங்கிக் கொடுத்துள்ளனராம்.!

ஏதோ இந்த அளவுக்காச்சும் செஞ்சாங்களே. அதுவரைக்கும் சந்தோஷம்தான்..!

Our Score