‘மெல்லிய இடையாள்’ என்றும் ‘இஞ்சி இடுப்பழகி’ என்று பெண்களை பாராட்டுவது சங்க காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது.
இன்று அந்த அடை மொழியை, வர்ணனையை விரும்பும் பெண்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகிறது. எண்ணற்ற விவாதங்கள், ஆலோசனை கூடங்கள், வர்த்தக ரீதியாக அதை காசாக்கும் விளம்பர யுத்திகள், என பல்வேறு முனைகளும் ஒரே நோக்கத்தில்தான் பாய்ந்து வருகிறது. பரவலாக பேசப்படும் இந்த விஷயத்தை பி.வி.பி. சினிமா நிறுவனம் நகைச்சுவை மிளிர சொல்ல வருகிறது.
பழம்பெரும் இயக்குனர் ராகவேந்திர ராவ் அவர்களின் மகனும், தெலுங்கில் பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கியவருமான கே .எஸ். பிரகாஷ் தனது இயக்கத்தில் ‘இஞ்சி இடுப்பழகி’ என்ற தலைப்பில் நகைச்சுவை மிளிரச் சொல்லியிருக்கிறார்.
‘இஞ்சி இடுப்பழகி என்ற இந்தத் தலைப்பே படத்தின் கதையைச் சொல்லும். உடல் வாகை பற்றிய படம் என்பதால் உலகமே போற்றும் ஆணழகனும் , பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகை கொண்ட அனுஷ்காவும்தான் நடிக்க வேண்டும் என்பதை எந்த விவாதமும் இன்றி ஒருமனதாக தீர்மானித்தோம்.
ஈரேழு லோகமும் வியந்து போகும் ஜோடியான ஆர்யாவும், அனுஷ்காவும் நடிக்கும்பொழுது அதை கண்கவர் வண்ணத்தில் பதிவு செய்ய நீரவ்ஷாவே பொருத்தமானவர் என்பதால் அவருடன் இணைந்து பணி செய்கிறேன்.
செவிகளுக்கு தேனூட்டும் இசையைத் தர மரகதமணி இசையமைப்பு செய்கிறார். எனது தகப்பானார் ராகவேந்திர ராவ் அவர்களுக்கு தமிழ் திரை உலகில் இருக்கும் மரியாதையையும், நன்மதிப்பையும் கண்டு வியந்து போனேன். நானும் அவர் வழியில் நல்ல திரைப்படங்களை இயக்கி அந்த நற்பெயரையும் ரசிகர்களையும் சம்பாதிப்பேன்” என நம்பிக்கையுடன் கூறினார் இளம் இயக்குனர் கே.எஸ்.பிரகாஷ்.
‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் பூஜை இன்று காலை ஏவி.எம். ஸ்டூடியோவில் உள்ள பிள்ளையார் கோவிலில் விமரிசையாக நடந்தது. பல்வேறு நட்சத்திரங்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் என திரை உலக பிரமுகர்கள் திரண்டு வந்து படக் குழுவினரை வாழ்த்தினர்.
இயக்கம் – கே எஸ்.பிரகாஷ்
ஒளிப்பதிவு – நீரவ் ஷா
கதை – கனிகா திலோன் கோவெலமுடி
வசனம் – ஆர் . எஸ் . பிரசன்னா
இசை – எம் .எம். மரகதமணி
பாடல்கள் – மதன் கார்க்கி
கலை – ஆனந்த் சாய்
நிர்வாக தயாரிப்பாளர் – சந்தீப் குன்னாம்