full screen background image

அனுஷ்காவின் ஆட்டத்துக்கு இன்றோடு 9 ஆண்டுகள்..!

அனுஷ்காவின் ஆட்டத்துக்கு இன்றோடு 9 ஆண்டுகள்..!

ஆந்திர அழகி அனுஷ்கா ஆட்டத்துக்கு வந்து இன்றோடு 9 ஆண்டுகள் ஆயிருச்சாம்.. இந்த நாளை ரொம்பவே சிலாகித்து முகநூலில் எழுதியிருக்கிறார்..!

anuskha-37

9 ஆண்டுகளுக்கு முந்தைய இன்றைய தினத்தில்தான் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் நாகார்ஜூனாவுடன் முதன் முதலாக நடித்த பவர் என்ற படத்தின் ஷீட்டிங்கிற்காக கேமிரா முன்பாக நின்றாராம்..! இவரை நாகார்ஜூனாவிடம் அறிமுகப்படுத்தி வைத்தவர் நடிகை பூமிகாவின் கணவர் பரத் தாகூராம்..! அன்றைக்கு ஆரம்பித்த ஓட்டம் இன்றுவரையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.

பவரில் துவங்கி இப்போது தயாரிப்பில் இருக்கும் ருத்ரமா தேவி, பாகுபாலி ஆகிய படங்களோடு சேர்த்தால் அனுஷ்கா நடித்திருக்கும் மொத்த படங்கள் 34. இதில் அருந்ததி படம் தென்னிந்தியா முழுவதும் சூப்பர்ஹிட்டான படம். வேதம் திரைப்படம் 3 மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்ட படம்..

anushka-shetty-1

அரபிக் குதிரை போன்ற தோற்றமாக இருந்தாலும்,  வயதானவராக தெரிந்தாலும்.. யோகாவினால் கட்டுப்பாட்டில் அவருடைய  அழகு, ஸ்டைலிஸான நடை.. நடன அசைவுகள்.. எல்லாம் சேர்ந்து முதல் தர ஹீரோயின் பட்டியலில் வைத்திருக்கிறது..

அருந்ததி வெற்றிக்கு பிறகு தெலுங்கு உலகமும் இவரை பார்த்து பயந்துதான் போனது.. இதற்கு முன்னர் விஜயசாந்திக்கு மட்டுமே இப்படிப்பட்ட தனி ஹீரோயின்களால் ஒரு படம் ஓடிய கதை நடந்தது..

anuskha-2

இப்போது தயாரிக்கப்பட்டு வரும் ருத்ரமா தேவி மற்றும் பாகுபாலி இரண்டுமே அனுஷ்காவின் நடிப்பையும், அழகையும் மட்டுமே நம்பி அவருக்காகவே எடுக்கப்பட்டு வருகிறது. இது இரண்டுமே நிச்சயம் வெற்றி பெறும் என்று டோலிவுட்டே நம்புகிறது..

இங்கே.. கோடம்பாக்கத்தில் நம்மளால அப்படியெல்லாம் யோசிச்சு கேரக்டர் கொடுக்க முடியாது என்பதால், ஹீரோக்களைச் சுற்றி டூயட் பாடியே தன்னைத் தொலைத்துவிட்டார். ஆனாலும் கோடம்பாக்கத்தில் அறிமுகமான  சில வருடங்களிலேயே ரெண்டு, வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத்திருமகள் ஆகிய 5 படங்களில் நடித்திருக்கும்போதே 2011-ம் ஆண்டு தமிழக அரசு அனுஷ்காவுக்கு கலைமாமணி விருது கொடுத்து கவுரவப்படுத்திவிட்டது..!

 ஏதோ நம்மளால முடிஞ்சது..! நல்ல வேஷம்தான் கொடு்கக முடியலை.. விருதாச்சும் கொடுத்து கவுரவிச்சாங்களே.. அது போதும்..!

வாழ்த்துகளும், பாராட்டுக்களும் அனுஷ்காவுக்கு..!

Our Score